உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காபூலில் சி.ஐ.ஏ., அலுவலக வளாகத்தில் துப்பாக்கி சூடு: அமெரிக்க ஊழியர் பலி

காபூலில் சி.ஐ.ஏ., அலுவலக வளாகத்தில் துப்பாக்கி சூடு: அமெரிக்க ஊழியர் பலி

காபூல் : ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அதிக பாதுகாப்புள்ள பகுதியில் இருக்கும் சி.ஐ.ஏ., அலுவலக வளாகத்தில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில், இருவர் பலியாகினர்; ஒருவர் காயமடைந்தார். காபூலில், அமெரிக்க தூதரகம் அருகில், 'அரியானா ஓட்டல்' உள்ளது. இது, சி.ஐ.ஏ.,வின் ஆப்கன் அலுவலகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த அலுவலகத்தில் ஆப்கனைச் சேர்ந்த ஒருவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை திடீரென கண் மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில், ஒரு அமெரிக்க ஊழியர் பலியானார்; மற்றொருவர் காயமடைந்தார். பாதுகாப்புப் படையினர் திருப்பி நடத்திய தாக்குதலில், ஆப்கன் பணியாளர் பலியானார்.

இச்சம்பவம், ஆப்கனில் மீண்டும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தான், அமெரிக்க தூதரகம் பயங்கரவாதிகளால் அங்கு தாக்கப்பட்டது. இதையடுத்து, ஆப்கன் முன்னாள் அதிபர் ரப்பானி கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை