உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பொறுப்பற்ற மனிதர் டிரம்ப்: பயங்கர சம்பவம் செய்து விடுவார்; கட்சி மாநாட்டில் எச்சரித்தார் கமலா

பொறுப்பற்ற மனிதர் டிரம்ப்: பயங்கர சம்பவம் செய்து விடுவார்; கட்சி மாநாட்டில் எச்சரித்தார் கமலா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: 'முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் பொறுப்பற்றவர். அவரை மீண்டும் வெள்ளை மாளிகையில் அமர்த்தினால் கடுமையான விளைவுகள் ஏற்படுத்தி விடுவார்' என ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.அமெரிக்காவில், நவ., 5ல் அதிபர் தேர்தல் நடக்கிறது. குடியரசு கட்சி சார்பில், முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 78, ஜனநாயக கட்சி சார்பில், இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றனர். சிகாகோவில் நடந்த, ஜனநாயக கட்சி மாநாட்டில் கலந்து கொண்ட, அதிபர் ஜோ பைடன், முன்னாள் அதிபர்கள் பில் கிளிண்டன், ஒபாமா உள்ளிட்டோர் கமலாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். மாநாட்டில் நிறைவு நாளில், ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை கமலா ஹாரிஸ் ஏற்றுக் கொண்டார். இதன் மூலம் அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதலாவது கறுப்பின மற்றும் ஆசிய அமெரிக்க பெண் என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.

டிரம்பை விமர்சித்தார் கமலா

மாநாட்டில் அவர் பேசியதாவது: என் அம்மா ஷியாமளா ஹாரிஸை ஒவ்வொரு நாளும் மிஸ் செய்கிறேன். அமெரிக்காவின் அதிபர் வேட்பாளராக, ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வாய்ப்பை ஏற்றுக்கொள்கிறேன். இந்தத் தேர்தலின் மூலம், நமது தேசம் கடந்த காலத்தில் பட்ட கஷ்டங்கள் மற்றும் போர்களைக் கடந்து செல்ல முடியும். முன்னோக்கி செல்லும் காலம் உருவாகும்.

விளைவுகள்

அனைத்து அமெரிக்கர்களுக்கும் ஒரு சிறந்த அதிபராக இருப்பேன் என்று நான் உறுதியளிக்கிறேன். நீங்கள் என்னை எப்போதும் நம்பலாம். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ஒரு பொறுப்பற்ற மனிதர். அவரை மீண்டும் வெள்ளை மாளிகையில் அமர்த்தினால் ஏற்படும் விளைவுகள் தீவிரமானவை. அதிபர் தேர்தல் என்பது நம் வாழ்வில் மிக முக்கியமானது. வாழ்நாள் முழுவதும் மக்கள் தான் எனக்கு எஜமானர்கள். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Barakat Ali
ஆக 23, 2024 13:02

அம்மணி பேச்சு நம்ம கலீஞர் பேச்சுமேறி கீதேபா ...... பாவம்யா அமெரிக்கா ........


Sivagiri
ஆக 23, 2024 12:51

இவருக்கு பின்னால் அர்பன் நக்சல் கும்பல் , கன்வெர்ட்டிங் கும்பல் , என பல கும்பல் இருக்கும் போல , இது அமெரிக்காவுக்கு நல்லது கிடையாது , சட்ட விரோதங்கள் சட்டபூர்வமாக கம்படும் போல , , , சீரும் பாம்பை நம்பு , சிரிக்கும் பெண்ணை நம்பாதே ,


Kumar Kumzi
ஆக 23, 2024 12:09

டெமோகிராடிக் கட்சி உலக நாடுகளில் கலவரங்களை ஏற்படுத்துவார்கள் இந்த கமலா இந்தியாவுக்கு எதிரான கருத்தை கொண்டவர்


Mohan D
ஆக 23, 2024 11:51

இந்த கமலா பிரச்சாரமும் நம்ம ராகுல் பிரச்சாரமும் கிட்ட தட்ட ஒரே மாதிரி தான் இருக்குது ...


sankar
ஆக 23, 2024 11:00

அமெரிக்காவின் பப்பு என்று சொன்னால் எல்லாருக்கும் புரியும்


sundarsvpr
ஆக 23, 2024 10:52

அமெரிக்காவில் யார் தேர்ந்து எடுக்கப்பட்டாலும் உலக பொது நோக்கு என்பது அமெரிக்காவின் நல்லது மட்டுமே. அந்த நாட்டில் ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன. பூனை வலம் போனால் என்ன இடம் போனால் என்ன.


sankar
ஆக 23, 2024 10:50

முதன்முறையா தனிநபர் வெறுப்புரை


RAJ
ஆக 23, 2024 10:38

சரி மேடம், நீங்களும். பைடேன் சாரும் உருப்படியா என்ன பண்ணீங்க .. கோள்மூட்டி விட்டதுதான் மிச்சம்... பங்களாதேஷ்ல , ஈரான்ல , வளைகுடா நாடுகள்ல .. இப்டி அடுக்கிகிட்டே போகலாம்...


மேலும் செய்திகள்









புதிய வீடியோ