உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போர் நிறுத்தம் செய்ய ஹமாஸ் ஒப்புதல்; அமெரிக்கா திட்டத்தை ஏற்க சம்மதம்

போர் நிறுத்தம் செய்ய ஹமாஸ் ஒப்புதல்; அமெரிக்கா திட்டத்தை ஏற்க சம்மதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு தீர்வு காண, அமெரிக்கா தயார் செய்துள்ள சமரசத் திட்டத்தை ஹமாஸ் அமைப்பினர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.பாலஸ்தீனத்தின் காசா திட்டுப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர், இஸ்ரேலில் புகுந்து நடத்திய தாக்குதல் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆயிரத்துக்கு மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான பேர் பிணைக்கதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்த தொடங்கியது. டிரம்ப் எச்சரிக்கையை தொடர்ந்து பிணைக் கைதிகளில் பெரும்பகுதியினரை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர். ஆனால் முழுமையாக விடுதலை செய்யவில்லை. சிறிது காலம் போர் நிறுத்தம் செய்து காத்திருந்த இஸ்ரேல், இப்போது மீண்டும் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது.தினமும் ஏராளமான பேர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக, அமெரிக்க அதிபரின் தூதர் விட்காப் சமரசத் திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளார். அவர் தயார் செய்துள்ள திட்டத்தை ஹமாஸ் அமைப்பினர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.இந்தத் திட்டத்தை இஸ்ரேல் அரசு ஏற்றுக் கொண்டால் போர் நிறுத்தம் அமலுக்கு வரவும், மீதமுள்ள பிணை கைதிகள் விடுதலை செய்யப்படவும் வாய்ப்பு உருவாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Ramaraj P
மே 27, 2025 06:56

நம்ப முடியாது.


ஜெகதீசன்
மே 27, 2025 00:38

தீவிரவாத இயக்கங்கள் போர் நிறுத்தத்திற்கு ஒத்துக்கொள்வது தங்களை மீண்டும் தயார்படுத்த எடுத்துக்கொள்ளும் அவகாசமே. அவற்றை ஒரேடியாக அழிப்பதே நன்று. ஐ.நா. ஒரு தண்ட அமைப்பு.


Karthik
மே 26, 2025 22:48

இந்தக் காட்டுமிராண்டி கூட்டம் திருந்த வாய்ப்பே இல்லை. இந்த ஜென்மம் இல்ல இன்னும் ஏழு ஜென்மம் எடுத்தாலும், தான் வசிக்கும் நாட்டை சுடுகாடாக்காமல் ஓயாது. இந்தக் காட்டுமிராண்டிகளின் பேச்சைக் கேட்டு இஸ்ரேல், போரை முடிவுக்கு கொண்டு வரக்கூடாது. உண்மையில் ஒவ்வொரு முடிவுக்கு வரவேண்டும் எனில் இந்த காட்டுமிராண்டிகள் இந்த புவியிருந்து இருந்து விரட்டி அடிக்கப்பட வேண்டும்.


Keshavan.J
மே 26, 2025 22:37

They are planning to regroup. Very difficult to believe them. billions of dollar will pour in to rebuild Gaza. This terrorist organization will loot it to buy arms. but the ceasefire is great news for Palestine citizens.


உண்மை கசக்கும்
மே 26, 2025 22:21

டிரம்ப்பிற்கு ஒரே ஒரு திட்டம் தான். போரை உருவாக்க வேண்டும். வர்த்தகம் மூலம் அதனை சரி செய்ய வேண்டும்.


Arinyar Annamalai
மே 26, 2025 23:08

நீங்களே போய் பார்த்தீங்களா?


Ramesh Sargam
மே 26, 2025 22:04

அதிக பட்சம் நாடு நாசமானபிறகு போர் நிறுத்த ஒப்பந்தமாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை