உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / புதிய போப்பை தேர்வு செய்ய வாக்களிக்கும் 4 இந்திய கார்டினல்கள்: முழு விவரம்

புதிய போப்பை தேர்வு செய்ய வாக்களிக்கும் 4 இந்திய கார்டினல்கள்: முழு விவரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாடிகன்; புதிய போப்பை தேர்வு செய்யும் நடைமுறையில் 4 இந்திய கார்டினல்கள் வாக்களிக்க உள்ளனர். கத்தோலிக்க கிறிஸ்துவ மத தலைவரான போப் பிரான்சிஸ் (88) நேற்று காலமானார். அவரது மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தலைவர்கள், மத தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டு வருகின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yayssua6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0போப் பிரான்சிஸ் மறைவைத் தொடர்ந்து, புதிய போப் தேர்வுக்கான நடைமுறைகள் தொடங்க உள்ளன. புதிய போப் தேர்வில் 80 வயதுக்கு குறைவான கார்டினல்கள் வாடிகனில் கூடி ஓட்டு போடுவர். ஓட்டளிக்கும் தகுதியான கார்டினல்கள் எண்ணிக்கை இதுவரை 120 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை தற்போது 136 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அவர்களில் இந்தியாவின் 4 கார்டினல்களும் இடம்பெறுகின்றனர். அவர்களின் விவரம் வருமாறு; பிலிப் நேரி பெராவ்; 72 வயதான இவர் கோவா, டாமன் பேராயர். இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு, ஆசிய ஆயர்கள் மாநாடுகளின் கூட்டமைப்பு தலைவராக உள்ளார். புலம்பெயர்ந்து வந்தோரை ஆதரிப்பதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் நீண்ட கால பங்களிப்பை அளித்து வருகிறார்.பசேலியாஸ் கிளிமீஸ்; இவரது இயற்பெயர் ஐசக் தொட்டும்கல், வயது 64. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை ஸ்தலமாக கொண்ட சைரோ மலங்கரா கத்தோலிக்க திருச்சபை பேராயர். இந்த திருச்சபையின் ஆயராக பல ஆண்டுகளாக நீடித்து வருகிறார். 2001ம் ஆண்டு பிஷப்பான அவர், 2012ல் கார்டினாலானார். ஆண்டணி போலா; ஹைதராபாத் பேராயரான இவரின் வயது 63. இந்தியாவில் இருந்து வந்த முதல் தலித் கார்டினல் என்ற வரலாற்றை படைத்தவர். அவரது நியமனம் திருச்சபையில் ஒரு சமத்துவத்தை உணர்த்துவதாக கருதப்படுகிறது. ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காடு; இந்தியாவின் 4 கார்டினல்களில் இவர் தான் மிகவும் இளையவர். இவரின் வயது 51. உலகம் முழுவதும் பல்வேறு மதங்கள் இடையே புரிதலை ஏற்படுத்த வேண்டும் என்பதில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். திருச்சபையில் ஒரு புதிய தலைமையை பிரதிநிதிப்படுத்துகிறார் என்பது பலரின் கருத்தாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

சிந்தனை
ஏப் 22, 2025 21:24

ஆகாவளிகளைப் பற்றிய செய்திகளால் ஆகப்போவது ஒன்றும் இல்லை


Amruta Putran
ஏப் 22, 2025 19:05

Any Dalit or woman possible?


Rasheel
ஏப் 22, 2025 11:50

தமிழன் ஆக வாய்ப்பில்லை. மலையாளி ஆக வாய்ப்புள்ளது. அண்டார்டிக்காவிலே டீ கடை போட்ட கூட்டம் அது. அந்த திறமை அதிகம்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 22, 2025 11:31

பாவமன்னிப்பு கொடுக்கப்போவது யாரு?? பாவமன்னிப்பு கிடைத்தால் அதன் அறிகுறி என்ன ??


Rasheel
ஏப் 22, 2025 13:59

இது பயமுறுத்தல் வியாபாரம். பாவம் பாவம் என்று சொல்லி தன்னம்பிக்கை இழக்க செய்வது. அதன் மூலம் பணத்தை கறப்பது. தசம பாகம் - மொத்த வருமானத்தில் பத்தில் ஒரு பங்கு. இந்த பாவ மன்னிப்பில் மாட்டிய இளம் பெண்கள் மற்றும் பெண்கள் பின்னால் அவர்கள் ரஹஸ்யம் வெளியே சொல்வதாக மிரட்டப்பட்டு?? இதனால் பாதிக்கப்பட்ட குடும்பம் பல ஆயிரம் பேர்..


R S BALA
ஏப் 22, 2025 09:27

தமிலன் யாரும் இல்லையா ஓட்டு போட..


SakthiBahrain
ஏப் 22, 2025 10:41

எதுக்கு அங்கையும் 500 வாங்கவா எங்க போனாலும் ஏதாவது தேறுமா என்று தான் பார்ப்போம்..


KRISHNAN R
ஏப் 22, 2025 09:26

ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காடு அவர்களின் நோக்கம் சிறப்பு


Matt P
ஏப் 22, 2025 09:12

ஆப்பிரிக்கரோ ஒரு இந்தியரோ போப் ஆவாரா என்றால் சந்தேகம் தான். வாக்களிக்கும் உரிமை தான் உண்டு நம் கழகம் போல.


சமீபத்திய செய்தி