உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கஜகஸ்தானில் ஹிஜாப் அணிய தடை

கஜகஸ்தானில் ஹிஜாப் அணிய தடை

அஸ்தானா : நாட்டின் பாதுகாப்பைக் கருதி, முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடும் வகையில் ஹிஜாப் போன்ற துணிகளைப் பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா கஜகஸ்தானில் நிறைவேறிஉள்ளது.மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில், முஸ்லிம்கள் பெரும்பான்மையினர் இல்லை. இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக இங்கு, முஸ்லிம்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இதையடுத்து, மதம் தொடர்பான கட்டுப்பாடுகள் அங்கு தீவிரமாக உள்ளன.'பெண்கள் முகத்தை மூடும் வகையில், ஹிஜாப் உள்ளிட்டவை அணிவது, முஸ்லிம் மதத்தில் கட்டாயமில்லை. 'அது வேண்டுமென்றே திணிக்கப்பட்டுள்ளது' என, கஜகஸ்தான் அதிபர் காஸிம் ஜோமார்ட் தோகாயேவ் ஏற்கனவே கூறியிருந்தார்.இங்கு, பள்ளிகளில் ஹிஜாப் அணிவதற்கு, 2017ல் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டது. அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவியர் ஹிஜாப் அணிவதற்கு, 2023ல் தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், இந்தத் தடைக்கு எதிராக முஸ்லிம்கள் போராடி வருகின்றனர்.இந்நிலையில், நாட்டின் பாதுகாப்பு கருதி, பொது இடங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கும் வகையில், கஜகஸ்தான் பார்லிமென்டில் மசோதா நிறைவேறியுள்ளது. இது அதிபரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இந்த பிராந்தியத்தில் உள்ள உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளிலும், முகத்தை மூடும் வகையில் துணிகள் அணிவதற்கு ஏற்கனவே தடை உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

metturaan
ஜூலை 07, 2025 08:03

குறைகுடங்களே கூத்தாடும்..


theruvasagan
ஜூலை 01, 2025 17:35

எங்க மதச்சார்பின்மை காப்பாளர், சிறுபான்மையினர் உரிமை காக்க ,தனது அல்லு சில்லுகளுடன் கஜகஜஸ்தான் சென்று முட்டாக்கு அணிந்து எதிர்ப்பைக் காட்டும் போராட்டம் நடத்தப்போவதாக ஒரு கிசுகிசு செய்தி அதிகாரபூர்வமில்லாத இடத்திலிருந்து கசிந்துள்ளது.


K V Ramadoss
ஜூலை 02, 2025 13:18

இந்த தைரியசாலிகள் தமிழ் நாட்டு எல்லையை தாண்டுவார்களா?


ஆரூர் ரங்
ஜூலை 01, 2025 12:12

முழு முகத்தையும் மறைத்துக் கொண்டு செல்வதை அனுமதித்தால் பொது இடங்களில் CCTV கேமராக்களை வைத்து என்ன பயன்?


Jack
ஜூலை 01, 2025 09:36

ஹிஜாப் புர்கா ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கணுமே


Jack
ஜூலை 01, 2025 09:33

ஆண்களுக்கும் கட்டாயமாக்கணும் ..


visu
ஜூலை 01, 2025 09:28

காஸ்மீரில் ஒரு புர்தா அணிந்த பெண் ராணுவ நிலை மீது கையெறி குண்டுகளை வீசிவிட்டு ஓடும் காட்சி வந்தது அவர் யாரென்று எப்படி கண்டுபிடிப்பது பொது இடங்களில் முகத்தை மறைப்பதை இந்தியாவும் தடை செய்யவேண்டும்


Sampath
ஜூலை 01, 2025 08:46

ஜூலை 8 ம் நாள் நாடு தழுவிய போராட்டம். கஜகிஸ்தானில் முஸ்லீம் அடக்குமுறையை கண்டித்து சுடாலின் தலைமியில் டெல்லி சென்னை இரு இடங்களிலிஇல் போராட்டம் . கஃப் தலைமையில் பேச்சு வார்த்தைக்கு ஒரு உயர் மட்ட குழு அனுப்பப்படும் .


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 01, 2025 10:00

இதுகுறித்து இரும்பு கரம் கொண்டு.. முதல்வர் தஞ்சை மாவட்ட செயலாளருக்கு கடிதம் எழுதி இருக்கிறார், உதயநிதி ஸ்டாலின் அன்பில் மகேசுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆலோசனை செய்து காவல் துறைக்கு உத்தரவிட்டிருக்கிறார். இன்பநிதியோ ஒருபடி மேலே சென்று... கஜகிஸ்தானில் அடக்குமுறையை கண்டித்து.. காலை 10 மணிமுதல் மதியம் 12.30 வரை உயிரை துச்சமென மதித்து உண்ணாவிரதம் இருக்கிறார் ..


Kulandai kannan
ஜூலை 01, 2025 08:14

சபாஷ்


Thravisham
ஜூலை 01, 2025 08:04

கழுத்தை சுற்றி மப்லர் ஒகே . மதவாத நாடான இரானிலியே இதுதான் நடைமுறை. தலையிலிருந்து கால் வரை துணியை அணிந்து செல்ல தடை தேவை. ஆணாதிக்கம் முஸ்லீம் மதத்தில் மிக அதிகம்.


பேசும் தமிழன்
ஜூலை 01, 2025 08:01

அவர்கள் வீட்டில் எப்படி வேண்டுமானாலும் துணி அணிந்து கொள்ளலாம். ஆனால் உள்ளே இருப்பது ஆணா அல்லது பெண்ணா என்று தெரியாத அளவுக்கு முகத்தை மறைப்பது ஏற்றுக் கொள்ள முடியாத வாதம்.... குற்றம் செய்து விட்டு தப்பி செல்ல முடியும்..... அதனால் நமது நாட்டிலும் தடை விதிக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை