உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்க மாகாணத்தில் ஹிந்து பாரம்பரிய மாதம்

அமெரிக்க மாகாணத்தில் ஹிந்து பாரம்பரிய மாதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஒஹியோ மாகாண சபையில், அக்டோபர் மாதத்தை ஹிந்து பாரம்பரிய மாதமாக அறிவிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவில், 30 லட்சத்துக்கும் அதிகமான ஹிந்து சமூகத்தினர் வசிக்கின்றனர். பலர் அந்நாட்டு செனட்டிலும் உறுப்பினர்களாக உள்ளனர். இங்கு, அனைத்து ஹிந்து பண்டிகைகளும் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகை காலமான, அக்டோபர் மாதத்தை ஹிந்து பாரம்பரிய மாதமாக அங்கீகாரம் செய்வதற்கான இயக்கத்தை, ஹிந்து அமெரிக்க அறக்கட்டளை முன்னெடுத்து வருகிறது. ஜார்ஜியா மாகாண கவர்னர், அக்டோபரை ஹிந்து பாரம்பரிய மாதமாக கடந்த ஆண்டு அறிவித்தார்.இந்நிலையில், ஒஹியோ மாகாணத்தின் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் ஹிந்து செனட்டர் நீரஜ், தன் மாகாணத்திலும் ஹிந்து பாரம்பரிய மாதத்துக்கு ஒப்புதல் பெறும் நடவடிக்கையை ஹிந்து அமைப்பினருடன் சேர்ந்து மேற்கொண்டார்.அதன்படி, ஒஹியோ மாகாண சபையில் அக்டோபர் மாதத்தை ஹிந்து பாரம்பரிய மாதமாக அறிவிக்கும் சட்ட மசோதா நேற்று அறிமுகப்படுத்தப்பட்டு, அதற்கு ஒப்புதலும் பெறப்பட்டது. இதன்பின் ஹிந்து மதத்தின் பாரம்பரியம், கலாசாரம் மற்றும் ஆன்மிக மரபுகளை விளக்கும் கொண்டாட்டங்கள் அரசு சார்பில் அக்டோபரில் நடத்தப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kalyanaraman
டிச 21, 2024 07:35

விரைவில் மற்ற மாகாணங்களிலும் அக்டோபர் மாதத்தை ஹிந்து பாரம்பரிய மாதமாக அறிவிக்கும் மசோதா நிறைவேற வாழ்த்துக்கள். ஜெய் ஸ்ரீ ராம்.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 21, 2024 07:22

உதயநிதி அங்கே சென்றும் சனாதனத்தை ஒழிக்கலாம் .....


J.V. Iyer
டிச 21, 2024 04:19

எல்லோரும் ஜனவரி 20 க்காக காத்துக்கொண்டிருக்கிறோம். தமிழகத்திற்கு இதை எப்போது வருமோ? வசந்தகாலம் வருமோ... நிலை மாறுமோ வைகை பெருகி வருமோ.. தமிழக மக்கள் குறை தீருமோ.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை