உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நான் ‛‛மலாலா யூசுப்சாய் அல்ல: பிரிட்டன் பார்லி.,யில் காஷ்மீர் சமூக ஆர்வலர் பேச்சு

நான் ‛‛மலாலா யூசுப்சாய் அல்ல: பிரிட்டன் பார்லி.,யில் காஷ்மீர் சமூக ஆர்வலர் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: பிரிட்டனில் தஞ்சமடைய நான் மலாலா யூசுப்சாய் அல்ல என காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் ,பெண் பத்திரிகையாளருமான யானா மிர் என்பவர் பிரிட்டன் பார்லிமென்ட்டில் பரபரப்பு உரையாற்றியுள்ளார்.காஷ்மீரை சேர்ந்தவர் யானா மிர், இவர் பத்திரிகையாளர், பேச்சாளர், சமூக ஆர்வலராக உள்ளார்.பிரிட்டனில் உள்ள ஜம்மு-காஷ்மீர் கல்வி மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிக்கு இவர் அழைக்கப்பட்டார். பின்னர் பிரிட்டன் பார்லிமென்டில் அவர் பேசியதாவது,பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசுப்சாய் என்ற சமூக ஆர்வலர் தனக்கு பாதுகாப்பு இல்லை என்பதாலேயே பிரிட்டனில் தஞ்சம் அடைந்துள்ளார். அவரை போன்று நான் இங்கு வரவில்லை. காஷ்மீரில் சமூக ஆர்வலர்கள் குறித்து தவறான பிரசாரம் பரப்படுகிறது நான் காஷ்மீரை சேர்ந்தவள், எனது சொந்த மண்ணில் அங்கு மிகவும் பாதுகாப்பாக தான் வாழ்கிறேன்.இங்குள்ள மலாலா யூசுப்சாய் போன்று உயிருக்கு பயந்து லண்டனில் அடைக்கலம் கேட்க வரவில்லை. அவரை போன்று நான் இருக்க விரும்பவில்லை. காஷ்மீரை விட்டு ஓடிவிடவில்லை என்றார். இவரது பேச்சு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

karthik
பிப் 24, 2024 11:30

உண்மையை உலகிற்கு தைரியமாக தெரிவித்த உங்களுக்கு நன்றி..இந்த நிலையை உருவாக்கிய தவத்திரு மோடி அவர்களுக்கும் நன்றி...


Ramesh
பிப் 24, 2024 11:22

Without knowing anything and due to misguidances, the Malala is always voicing against Kashmir.. Head weight Malala, she is jut refugee in UK. Well-done Mir.. Please spread this message to all over the world especially to the Muslim countries.. Now J&K is for the full investments.. Jai Hind..


vbs manian
பிப் 24, 2024 09:58

சபாஷ் மேடம்.


Shekar
பிப் 24, 2024 09:44

யானா மீர் நடத்தும் யூடியூப் சேனல் பாருங்கள் மிகவும் நன்றாக இருக்கும்(ஹிந்தியில் மட்டுமே உள்ளது), காஸ்மீர் மக்களிடம் உள்ள தேசப்பற்று தெரியும், ஆனால் இங்குள்ள சிலருக்கு யாசின் மாலிக் மட்டுமே தெரியும்


J.V. Iyer
பிப் 24, 2024 06:58

எவ்வளவு நாட்கள்தான் இந்த 'போர்க்'கிஸ்தான் பொய்யை பரப்பமுடியும்?? மக்களே வெறுத்துபோய்விட்டார்கள்.


NicoleThomson
பிப் 24, 2024 04:11

இதுதான் பாகிஸ்தானியருக்கும் இந்தியருக்கும் வித்தியாசம் , சொந்த நாட்டையே காட்டிக்கொடுப்போர் பாகிஸ்தானிய மக்கள் என்பதனை புரிந்து கொண்டேன்


Ramesh Sargam
பிப் 23, 2024 23:49

சரியான பேச்சு. பாகிஸ்தானைச்சேர்ந்த மலாலா யுசுப்சாய்க்கு சரியான அடி.


Priyan Vadanad
பிப் 24, 2024 02:56

பாகிஸ்தான் மலாலாவுக்கு என்ன நடந்தது என்று தெரிந்திருந்தால் இப்படி ஒரு கருத்து வந்திருக்காது. கஷ்மீர் மலாலா இப்படி வாய்க்கு வந்தபடி பேசியிருக்கக் கூடாது.


Priyan Vadanad
பிப் 24, 2024 03:04

மலாலா ஒரு சில மதங்களில்/நாடுகளில் பெண்களின் கல்வியறிவு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த செயல்படுபவர். நீங்களும் உங்கள் கருத்தை கவனமாக பதிவிட்டிருக்கலாம். யானா மீர் மலாலா பற்றிய பேச்சை தவிர்த்திருக்கலாம். மற்றபடி அவரது பேச்சு நல்லதே.


Shekar
பிப் 24, 2024 09:40

, அதைத்தான் அவங்க சொல்றாங்க காஷ்மீர் மிக பாதுகாப்பானது பாகிஸ்தான் மோசம்ன்னு. இந்த மலாலா தான் அப்பப்ப காஷ்மீர் விசயத்துல மூக்கை நுழைக்கும், அதுக்கும் பாகிஸ்தானுக்கும் சேர்ந்து பதிலடி. அது சரி, மலாலா பற்றி சொன்னால் உங்களுக்கு ஏன் வருத்தம், நம் நாட்டை உயர்த்தி பேசுவதால் வருத்தமா?


Sathyasekaren Sathyanarayanana
பிப் 23, 2024 23:20

இவரது பேச்சை நானும் கேட்டு ரசித்தேன், மிகவும் அருமையான உண்மையை வெளிப்படுத்தி, பத்திரிகையளர்களின் முகத்திரையை கிழித்தார். அதைப்பற்றி ஏன் எழுதவில்லை?


Jegadees
பிப் 23, 2024 23:13

சிறப்பான பேச்சு....சரியான சவுக்கடி வாழ்த்துக்கள்


Sivagiri
பிப் 23, 2024 23:05

ஆனா , மத்த தீவினவாதிகளும் , கடத்தல்காரர்களும் , அண்டர்க்ரவுண்ட் க்ரூப்புகளும் கூட பாதுகாப்பாத்தான் இருக்காங்க - அதுவும் சிந்திக்க வேண்டி உள்ளதே


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை