உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நான் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன்: சொல்கிறார் அதிபர் டிரம்ப்

நான் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன்: சொல்கிறார் அதிபர் டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: ''நான் இந்தியாவுக்கு மிகவும் நெருக்கமானவன்'' என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் காரத்தினால் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்து அதிபர் டிரம்ப் அதிரடி காட்டினார். வரி பதற்றத்திற்கு பிறகு இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகள் பாதிக்கப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=flro9xh6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்தியா மீது தொடர் விமர்சனங்களை அதிபர் டிரம்ப் முன்வைத்தார். இந்த சூழலில், ''நம் நாட்டின் மீது அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத கூடுதல் வரி, வரும் நவம்பர் மாதத்துக்குள் விலக்கிக் கொள்ளப்படலாம்'' என, மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்து உள்ளார்.இந்நிலையில் பிரிட்டனில் பிரதமர் மோடியை அதிபர் டிரம்ப் புகழ்ந்து பேசினார். அப்போது அதிபர் டிரம்ப் கூறியதாவது: ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குகின்றன என்பது எனக்கு நன்கு தெரியும். நான் இந்தியாவுக்கு மிகவும் நெருக்கமானவன். இந்திய பிரதமர் மோடிக்கும் மிகவும் நெருக்கமானவன். நான் அவரிடம் பேசினேன். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தேன். எங்களுக்குள் மிக சிறந்த உறவு உள்ளது. மிக எளிமையாக சொன்னால் எண்ணெய் விலை குறைந்தால் புடின் வெளியேறப் போகிறார். அவருக்கு வேறு வழியில்லை. அவர் அந்த போரிலிருந்து வெளியேறப் போகிறார். உக்ரைன் போரை தீர்ப்பது எளிதானது என நினைத்தேன். புடின் என்னை ஏமாற்றிவிட்டார். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Vasan
செப் 19, 2025 15:45

"நெருக்கமாக இருக்கிறேன்". அப்படியா சொன்னேன்? மொழி பெயர்ப்பு தவறு. "இறுக்கமாக நெருக்குகிறேன்".


Anand
செப் 19, 2025 14:11

உன்னோட நெருக்கம் எப்படி என இத்தாலி மாபியா போடும் ஆட்டத்தின் மூலம் வெளிப்படுகிறது.


Ramesh Sargam
செப் 19, 2025 12:55

இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலையே. நாளுக்கு நாள் மாறி மாறி கடிக்குது. அதாவது மாறிமாறி பேசுகிறார்.


Shivakumar
செப் 19, 2025 12:43

கோமாளியை தேர்வு செய்து உள்ளது.


Rajarajan
செப் 19, 2025 11:59

ஸ்ஸ்ஸ்ஸ், இப்போவே கண்ணை கட்டுதே.


m.arunachalam
செப் 19, 2025 11:40

நம்ப வேண்டாம்.......


Dv Nanru
செப் 19, 2025 11:37

என்ன அமெரிக்க அதிபருக்கு திடீர்னு பாசம் பொங்குது இந்தியா மேல மோடிக்கு வாழ்த்து சொல்றார் என்ன காரணம் அமெரிக்காவிலிருந்து மூன்று முறை தொலைபேசி வாயிலாக இந்திய வெளியுறவுத் துறையை தொடர்பு கொண்டது ஆனால் அதற்கு பதில் அளிக்கவில்லை இந்தியா அதனால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பயந்து போய் மோடி ஜிக்கு முதல் ஆளா பிறந்தநாள் வாழ்த்து சொல்லுகிறார் ஆனால் அவர் இந்தியா மீது 50% சதவீத வரி விதித்ததால் இந்தியாவிற்கு எந்த நஷ்டமும் இல்லை ஆனால் அமெரிக்காவிற்கு தான் மிகப்பெரிய பாதிப்பு இது அமெரிக்க மக்களின் பிரதிபலிப்பும் அமெரிக்க செனட் உறுப்பினர்கள் ட்ரம்புக்கு எதிராக போர் கொடி தூக்கினார்கள் நாங்கள் இந்தியாவுடன் ரொம்ப கஷ்டப்பட்டு 21 ஆண்டுகளாக இந்தியா அமெரிக்க நட்பு நாடாக திகழ்கிறது இதைப் பற்றி எல்லாம் டிரம்ப் சிந்திக்காமல் திடீரென 50 சதவீத வரியை உயர்த்தினார் ஆனால் இப்போது ட்ரம் மோடி என்னுடைய நெருங்கிய நண்பர் என்றெல்லாம் பொய் சொல்லுகிறார் இது உலகம் அறிந்த உண்மை அதனால் நாம் எந்த விதத்திலும் அடிபணிய மாட்டோம் நாம் அமெரிக்காவை விட பல மடங்கு வளர்ச்சி கண்டு இருக்கிறோம் அதனால் தான் அமெரிக்கா பயந்து கொண்டிருக்கிறது இந்தியாவால் எதையும் செய்ய முடியும் என்று தாமதமாக ட்ரம்ப் புரிந்து கொண்டார்..


ஆரூர் ரங்
செப் 19, 2025 11:06

காக்டெய்லா அடிச்சா இப்படி நிமிஷத்துக்கு நிமிஷம் மாற்றிப்பேச வைக்கும்.


Anand
செப் 19, 2025 10:39

நீ இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக இல்லை, காங்கிரஸ் கைக்கூலிகளுடன் மிகநெருக்கமாக உள்ளாய்.


மொட்டை தாசன்...
செப் 19, 2025 10:22

இந்தியாவை பொறுத்தவரை டிரம்ப் நம்பகத்தன்மை இல்லாத ஒரு அமெரிக்க அதிபர். அநியாயமாக இந்தியாமீதான வரியை உயர்த்தியதை எச்சரிக்கை மணியாக கருதி இனி அமெரிக்காவை ஒன்றி இருப்பதை தவிர்க்கவேண்டும் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை