உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / "கடவுள் அருளால் உயிர் பிழைத்தேன்" - டிரம்ப்

"கடவுள் அருளால் உயிர் பிழைத்தேன்" - டிரம்ப்

வாஷிங்டன்: கடவுள் அருளால் தான் உயிர் பிழைத்தேன் என்றும் தொடர்ந்து அமெரிக்காவுக்காக போராடுவேன் என்றும் அமெரிக்க அதிபர் தேர்தல் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் இன்று (ஜூலை 19) கட்சி கூட்டத்தில் பேசுகையில் அவர் குறிப்பிட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் காதில் லேசான காயத்துடன் டிரம்ப் உயிர் தப்பினார். இதன் பின்னர் அவர் பங்கேற்ற முதல் கூட்டத்தில் பேசியதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ee31dxty&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அந்த துப்பாக்கிச்சூடு நடந்ததை நான் எண்ணி பார்க்கிறேன். என் தலையை நோக்கி குண்டு பாய்ந்து வந்தது. என் மீது துப்பாக்கி குண்டு பட்டதும் எனது காது, கைகளில் ரத்தமாக இருந்தது. நான் இறந்து விட்டேன் என நினைத்தேன், கூடியிருந்த மக்கள் எல்லாம் நான் இறந்து விட்டதாக நினைத்து பதறினர். இறந்திருந்தால் நான் இப்போது உங்கள் முன்பு நிற்க முடியாது. கடவுள் என்னோடு இருக்கிறார் . கடவுள் அருளால் உயிர் பிழைத்தேன். தலையை சாய்த்து கொண்டதில் பெரும் ஆபத்தில் இருந்து தப்பினேன். நடந்த தாக்குதலை நினைக்கும் போது மிக வருத்தமாக உள்ளது. இருப்பினும் நான் இப்போது மிக உற்சாகமாக இருக்கிறேன். தற்போது நடப்பது அமெரிக்க மக்களின் தேர்தல். இந்த அமெரிக்க நாட்டிற்காக தொடர்ந்து பாடுபடுவேன். எனது வாழ்க்கையில் போராட்டம் போராட்டம் தொடர்ந்து போராடுவேன் . உலகில் அமைதியை நிலைநாட்டுவோம். ஜனநாயகத்தை காத்திட பாடுபடுகிறேன். தற்போது அமெரிக்காவில் அதிபர் ஜோபைடன் தலைமையிலான அரசு சரிவை சந்தித்துள்ளது. பணவீக்கம் அதிகரித்துள்ளது. எல்லை பாதுகாப்பு பலப்படுத்த வேண்டியுள்ளது. ஒரே நாடு என்ற அமெரிக்காவை காத்திட பாடுபடுவோம். மீண்டும் சிறந்த அமெரிக்காவை உருவாக்குவோம் இவ்வாறு டிரம்ப் பேசினார்.

பாதுகாப்பு படையினருக்கு பாராட்டு

டிரம்ப் உரையாற்றும் போது துப்பாக்கிச்சூட்டில் துரிதமாக செயல்பட்டதை நான் பாராட்டுகிறேன். அவர்களுக்கு நான் நன்றி கடமைப்பட்டிருக்கிறேன். மேடையில் பாதுகாப்பு படை வீரர்கள் போன்ற வடிவமைக்கப்பட்ட சிலைக்கு முத்தமிட்டு நன்றியை வெளிப்படுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

பேசும் தமிழன்
ஜூலை 20, 2024 10:08

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.... முன்பு அமெரிக்காவில் ஜகநாதர் யாத்திரை நடத்த வழி செய்ததன் பயன் இப்போது கிடைத்து இருக்கிறது.....ஓம் நமோ நாராயணா


RAJ
ஜூலை 19, 2024 20:19

என்ன குமாரு பயந்துட்டயா..


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 19, 2024 17:29

ஜெய் ஜகன்னாத் .......


Uma Subhash
ஜூலை 19, 2024 16:07

அமெரிக்க கரென்சி நோட்டில் "நாங்கள் கடவுள் மீது நம்பிக்கை வைத்துள்ளோம்" என்ற வாசகம் உண்டு.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 19, 2024 15:47

கடவுள் அருளால் என்று அமெரிக்காவில் சொல்லலாம். இங்க எங்க ஓங்கோல் நாட்டுல வெங்காய மண்ணுல இயற்கைன்னு சொல்லணும். இல்லாட்டி உங்களை ஆர்யன், டமில் துரோகின்னு சொல்லுவோம்


ngopalsami
ஜூலை 19, 2024 13:53

எல்லா துறைகளிலும் அளவிடமுடியாத வளர்ச்சி பெற்று, கல்வி, தொழில்நுட்பம், பொருளாதாரம் போன்ற அணைத்து துறைகளிலும் முதன்மையாக விளங்கும் அமெரிக்கர்கள் கடவுளைப்பற்றி பேசுகிறார்கள். ஆனால், ஆன்மீகத்திற்கு அடித்தளம் போட்ட நாம் கடவுளை மறுக்கிறோம், கடவுளைப்பற்றி எதிர்மறையாக பேசுகிற கூட்டத்தை என்ன சொல்வது.


Columbus
ஜூலை 19, 2024 12:28

It was a miracle that Trump escaped from death. Reminiscent of Day of the Jackal movie on Charles de Gaulle.


selvam
ஜூலை 19, 2024 12:11

டிரம்பை கடவுள் காப்பாற்றியதற்கு காரணம் அமெரிக்காவை ஜோ பைடனிடம் இருந்து காப்பாற்ற தானோ?


selvam
ஜூலை 19, 2024 12:10

கடவுளின் அருமை டிரம்புக்கு தெரிந்துள்ளது. ஆனால் இங்கிருக்கும் சிலருக்கு தான் தெரிவதில்லை .


மேலும் செய்திகள்