உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / விரும்பும் நாடுகளிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு உரிமையுண்டு: ரஷ்யா ஆதரவு

விரும்பும் நாடுகளிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு உரிமையுண்டு: ரஷ்யா ஆதரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: இந்தியா இறையாண்மைமிக்க நாடு, பலன் கிடைக்கும் இடத்தில் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அந்நாட்டிற்கு உரிமை உண்டு என ரஷ்யா தெரிவித்துள்ளது.உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதாகக் கூறி இந்தியாவில் இருந்து இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு அமெரிக்கா வரி விதித்துள்ளது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.சில நாட்களுக்கு முன்னர் ரஷ்ய அதிபர் புடின் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்து சென்றார். அப்போது முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.இந்நிலையில் ரஷ்ய அதிபர் வசிக்கும் கிரெம்ளின் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாவது: இந்தியா இறையாண்மை நாடாக இருக்கிறது. அப்படியே நீடிக்கிறது. வர்த்தக தனக்கு பலன் கிடைக்கும் இடங்களில் வர்த்தகம் செய்யவும், கச்சா எண்ணெய் வாங்கவும், இந்தியாவுக்கு உரிமை உண்டு. ரஷ்யாவுக்கு நம்பகமான எரிசக்தி கூட்டாளியாக ரஷ்யா நீடிக்கும் என பிரதமர் மோடியிடம் அதிபர் புடின் கூறியுள்ளார். தங்களது பொருளாதார நலனுக்காக, இதனை இந்தியா இந்த பாதையை தொடர்ந்து பின்பற்றும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி