உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியா -பாக். இடையே அணுமின்நிலைய தகவல்கள் பரிமாற்றம்

இந்தியா -பாக். இடையே அணுமின்நிலைய தகவல்கள் பரிமாற்றம்

புதுடில்லி: இந்தியா-பாக்., இடையே அணு மின்நிலையங்கள் குறித்த தகவல்களை பரிமாறி கொண்டன.இந்தியா -பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டால், தங்களது நாட்டில் உள்ள அணு மின்நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை தவிர்க்கும் வகையில் 'அணு மின் நிலையங்கள் மீதான தாக்குதலைத் தடைசெய்வது என கடந்த 1988-ல் டிச.31-ம் தேதி இரு நாடுகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் 1991-இல் ஜன. 27-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஒப்பந்தப்படி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரத்தில் இரு நாடுகளும் அணுமின்நிலையகள் குறித்த தகவல்களை பரிமாறி கொள்வது கட்டாயம்.இந்நிலையில் இன்று இரு நாட்டு தூதரகங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இரு நாடுகளிடையே இந்த தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இதன்படி பாகிஸ்தானின் அணுமின் நிலையங்கள் குறித்த தகவல் இஸ்லாமாபாதில் உள்ள இந்திய தூதரகத்தின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதே போன்று, இந்தியாவின் அணுமின் நிலையங்கள் குறித்த தகவல்கள் டில்லியில் பாக்., தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ராமகிருஷ்ணன்
ஜன 02, 2024 07:38

ஒப்பந்தங்கள் படி பாக்கிஸ்தான் நடக்குமா அல்லது. தீவிரவாதிகளின் துணையுடன் இந்தியாவுக்கு குடைச்சல் கொடுக்குமா


Bye Pass
ஜன 02, 2024 07:17

பாகிஸ்தான் அணுமின்நிலையங்கள் சீனா நிறுவியவை ..தானாகவே புட்டுக்கும் …


Ramesh Sargam
ஜன 02, 2024 06:15

பாகிஸ்தானை நம்பி இதுபோன்ற பரிமாற்றம் எதுவும் செய்யாமல் தவிர்ப்பது சிறந்தது. இந்த பரிமாற்றம், ஒரு xerox copy எடுக்கப்பட்டு அநேகமாக அவர்கள் உருவாக்கும் பயங்கரவாதிகளிடம் கொடுக்கப்படலாம் என நான் கருதுகிறேன்.


மேலும் செய்திகள்