உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பொய்யாக லீவ்: 2ம் இடத்தில் இந்தியா

பொய்யாக லீவ்: 2ம் இடத்தில் இந்தியா

மெல்பேர்ண் : உடல்நிலை சரியில்லை என பொய் கூறி அலுவலகங்களில் லீவ் வாங்கும் ஊழியர்கள் அதிகம் உள்ள 2வது நாடு இந்தியா என சமீபத்திய சர்வே ஒன்றில் தெரிய வந்துள்ளது. ஆஸ்திரேலியா, சீனா, பிரான்ஸ், ஐரோப்பா, இந்தியா, மெக்சிகோ, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில், அலுவலகங்களில் உடல்நிலை நன்றாக இருந்தும் சரியில்லை என பொய் கூறி லீவ் வாங்கும் ஊழியர்கள் அதிகம் உள்ள நாடு குறித்த சர்வே நடத்தப்பட்டது. இந்த சர்வே பட்டியலில் 71 சதவீதத்துடன் சீனா முதலிடத்திலும், 62 சதவீதத்துடன் இந்தியா 2வது இடத்திலும், 58 சதவீதத்துடன் ஆஸ்திரேலியா 3வது இடத்திலும் உள்ளன. வேலைப்பளு காரணமாக அழுத்தமாக உணர்வதால் பணியாளர்கள் இவ்வாறு நடந்து கொள்வதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் 52 சதவீதம் பேரும், ஐரோப்பாவில் 43 சதவீதம் பேரும், மெக்சிகோவில் 38 சதவீதம் பேரும், பிரான்சில் 16 சதவீதம் பேரும் இவ்வாறு பொய்யான காரணங்கள் கூறி லீவ் எடுப்பதாக தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி