இலங்கை கஞ்சா கடத்திய இந்தியர் கைது
கொழும்பு:உயர்ரக கஞ்சா கடத்திய இந்தியர் ஒருவர், இலங்கை விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள்தெரிவித்தனர்.நம் அண்டை நாடான இலங்கையின் சர்வதேச விமான நிலையத்தில் உயர்ரக கஞ்சா எனக் கூறப்படும், 'குஷ்' போதைப்பொருளை கடத்த முயன்றதாக இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து, 10.75 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும், இதன் மதிப்பு, 2.9 கோடி ரூபாய் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர், புதுடில்லியில் உள்ள காலணி கடையில் விற்பனையாளராக பணியாற்றி வரும் 43 வயது நபர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த உயர்ரக கஞ்சாவை, தாய்லாந்தில் இருந்து இவர் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. சட்ட விரோத போதைப் பொருட்களை கண்டறிய விமான நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள, 'ஸ்கேனிங்' இயந்திரத்தின் வாயிலாக இந்தக் கடத்தல் கண்டுபிடிக்கப்பட்டதாக, இலங்கை சுங்கத்துறை அதிகாரி கள் தெரிவித் தனர்.