வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வடக்கன்ஸ் எங்க போனாலும் திருட்டு வேலைதான்
வாஷிங்டன்: அமெரிக்காவில் மாபியா நடத்தும் சூதாட்ட மோசடியில் ஈடுபட்டதாக இந்திய வம்சாவளி அரசியல் பிரமுகர் ஆனந்த் ஷா மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.அமெரிக்காவில் சூதாட்ட மோசடிகள் மூலம் பணம் பறிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. மாபியா நடத்தும் சூதாட்ட நடவடிக்கையில் பங்கேற்றதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நகராட்சி கவுன்சிலர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.குற்றம் சாட்டப்பட்ட 39 பேரில் 42 வயதான ஆனந்த் ஷாவும் ஒருவர்.மாநிலத்தில் 12 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது.யார் இந்த ஆனந்த் ஷா?
நகராட்சி கவுன்சிலர் ஆனந்த் ஷா. நியூ ஜெர்சியில் வளர்ந்து வரும் அரசியல்வாதியாக இருந்தார்.நியூயார்க் புறநகர்ப் பகுதியான ப்ராஸ்பெக்ட் பார்க்கில் நகராட்சி கவுன்சிலராக இரண்டாவது முறையாகப் பணியாற்றினார்.மேலும் நிதி, பொருளாதார மேம்பாடு மற்றும் காப்பீட்டுப் பொறுப்பையும் வகித்தார்.
வடக்கன்ஸ் எங்க போனாலும் திருட்டு வேலைதான்