உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் பற்றியது தீ: 16 பேர் பலியான சோகம்

இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் பற்றியது தீ: 16 பேர் பலியான சோகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் உள்ள முதியோர் இல்லத்தில், தீப்பற்றியதில் முதியோர்கள் 16 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள மனாடோவில் முதியவர்கள் இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் திடீரென தீப்பற்றியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஆறு தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு படையினர் விரைந்தனர். 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீ அணைத்தனர். ஆனாலும் தீயில் உடல் கருகி முதியோர்கள் 16 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். உறங்கிக் கொண்டிருந்தபோது தீப்பற்றியதால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது என மீட்பு படையினர் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் குடும்பத்தினரின் உதவியுடன் அடையாளம் காண்பதற்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.அக்கம்பக்கத்தினர் முதியோர் இல்லத்தில் பற்றிய தீயை அணைக்க, தீயணைப்பு படை வீரர்களுக்கு உதவியாக இருந்தனர். மின்சார கசிவு காரணமாக தீப்பற்றியதாக தெரிகிறது. இதற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை