உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இஸ்ரேல் தாக்குதல்: ஈரான் ஏவுகணை தளங்கள் தரைமட்டம்!

இஸ்ரேல் தாக்குதல்: ஈரான் ஏவுகணை தளங்கள் தரைமட்டம்!

டெஹ்ரான் : ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பழிவாங்கும் வகையில், நேற்று 100 ஜெட் விமானங்களை அனுப்பி, ஈரானின் ஏவுகணை தயாரிப்பு தளங்களை குண்டு வீசி தரைமட்டமாக்கியது இஸ்ரேல். --காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, கடந்தாண்டு இஸ்ரேலுக்குள் திடீரென புகுந்து, சரமாரியான ராக்கெட் தாக்குதல் நடத்தி 1,000 பேருக்கு மேல், கொன்று குவித்தது. 250 அப்பாவி மக்களை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றது. பிரஜைகளை மீட்க ஹமாஸ் மீது போர் தொடுத்தது இஸ்ரேல்.ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக ஹெஸ்பொல்லா பயங்கரவாத அமைப்பும், அண்டை நாடான லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தி வந்தது. இரண்டு அமைப்புகளுக்கு நிதியும், ஆயுதங்களும் அளித்து வரும் ஈரான், கடந்த 1ம் தேதி, ஒரே நேரத்தில் 180 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவி தாக்குதல் நடத்தியது. ஹமாஸ், ஹெஸ்பொல்லா அமைப்புகளின் தலைவர்களை இஸ்ரேல் கொன்றதற்கான தண்டனை என அந்த தாக்குதலை ஈரான் நியாயப்படுத்தியது.இதற்கு பழி தீர்க்காமல் விடமாட்டோம் என இஸ்ரேல் கூறியிருந்தது. எனவே, ஈரானின் அணு ஆயுத மையங்கள், எண்ணெய் கிணறுகள் மீது இஸ்ரேல் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தும் என கூறப்பட்டது. ஆனால் அணு ஆயுத போர் மூள காரணமாகி விடக்கூடாது என்பதால், வேறு வழிகளை இஸ்ரேல் தேடியது. புதிய திட்டப்படி, நேற்று அதிகாலையில் 100க்கு மேற்பட்ட ஜெட் போர் விமானங்களை அனுப்பி, ஈரான் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த விமானங்கள், ஈரான் எல்லைக்குள் 2,000 கி.மீ., பறந்து, தலைநகர் டெஹ்ரான் உட்பட மூன்று நகரங்களில் ஈரானின் ராணுவ கட்டமைப்புகளை குறிவைத்து குண்டுமழை பொழிந்தன. இதில், ஈரானின் ஏவுகணை தளங்கள் தரைமட்டமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆனால், 'இஸ்ரேல் தாக்குதல் பிசுபிசுத்தது. பாதிப்பு ஏதும் இல்லை. எதிர்த்து நின்ற நான்கு வீரர்கள் மட்டுமே உயிரிழந்தனர்' என்று ஈரான் கூறியது. ஈரான் 'டிவி'யிலும் பெரிதாக செய்திகள் வரவில்லை. சந்தையில் தொழிலாளர்கள் காய்கறியை லாரியில் ஏற்றும் காட்சிகளை ஒளிபரப்பி நிலைமை சீராக இருப்பதாக காட்டினர்.அலை அலையாக விமானங்களை மூன்று முறை அனுப்பி, குறிப்பிட்ட சில ராணுவ இலக்குகளை மட்டும் குறி வைத்து தாக்கி அழித்ததாக இஸ்ரேல் தெரிவித்தது. 'உயிருக்கு சேதம் நேராமல் தாக்குதல் நடத்தினோம். இது, ஈரான் எங்கள் மீது நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி தான். இனியும் ஈரான் வம்பு செய்தால், வேறு ரேஞ்சில் பதிலடி கொடுப்போம்' என்று இஸ்ரேல் கூறியுள்ளது.ஈரானும் விடாப்பிடியாக, 'நாங்கள் கொடுக்கப்போகும் பதிலடி இதுவரை இஸ்ரேல் பார்த்திராத வகையில் இருக்கும்' என கூறியுள்ளது. இதற்கிடையே, ஈரானின் சிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்பு வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், 10 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 'இதுபோன்ற தாக்குதல்களால் யாருக்கும் எந்த பயனும் ஏற்படப்போவது இல்லை. சம்பந்தபட்ட நாடுகள் அமைதி காக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா கருத்து

அமெரிக்க அதிகாரிகள் கூறியதாவது:மேற்காசிய நிலவரத்தை அதிபர் பைடன் கூர்ந்து கவனித்து வருகிறார். இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், அமெரிக்காவுக்கு எந்த தொடர்பும் இல்லை. இரு நாடுகளும் தாக்குதல்களை நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Rpalnivelu
அக் 28, 2024 16:50

கமேனிகள் இருக்கும் வரை ஈரானிய மக்களுக்கு துன்பமே. மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றத்துக்கு காரணமே இந்த ஈரானிய முல்லாக்கள்தான். வேலை வெட்டியில்லா முல்லாக்களால் ஈரானிய மக்கள் படும் துன்பது அளப்பரியது. பழைய ரேஜா பஹ்ல்வி ஆட்சியே ஈரானிய மக்களின் பொற் கால ஆட்சி.


Antony alexander
அக் 27, 2024 20:41

போரின் துவக்கம் யார்? அதை கண்டித்தபிறகு போரைபற்றி பேசுங்கள்,


M Ramachandran
அக் 27, 2024 17:49

முன்கோபமும் முன் யோசனை அற்ற ஹமாஸ் கும்பல். தூங்கி கொண்டிருந்த இஸ்ரேல் மேல் தாக்குதல் நடத்தி வீண் வம்பை விளை கொடுத்து வாங்கினான். ஏதோ வீரர்கள் என்று தற்பெருமைய்ய அடித்து கொண்டு ஹமாஸ் காரனுக்கு துணை போவது போல் ஹஸ்புல்லா கும்பல் சுத்தமா யோராசிக்க த்ராணியில்லாதவர்கள் அது கொஞ்சம் மட்டு அது போததென்று ஈரான் விட்டேரனா பார் என்று மார் தட்டி கொண்டு சும்மா தீபாவளி நேர பாட்டாசு மாதிரி இஸ்ரேலல் மேல் அதீத நம்பிக்கையுடன் உட்கார்ந்த இடத்திலிருந்து பந்து வீசுவது போல் ராக்கேட் பட்டாசுகளை வீச இப்போ இஞ்சிதின்ன குரங்கயை போன்ற நிலை. இதன் பலன் பல்லாயிர கணக்கானா உயிர்கள் பலி. இதன் முழு பொறுப்பு ஹாமாஸ்க்காரநன் ங்கள் தான் .


Ramakrishnan R
அக் 27, 2024 17:31

இந்தியாவில் முஸ்லிம்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்று பொய் கூறிய ஈரான் தலைவர் கொமேனி நமக்கு நண்பனா? ஒவ்வொரு முறையும், முஸ்லிம் அமைப்பாகிய OIC யில் இந்தியா மீது கண்டன தீர்மானம் கொண்டு வரும் ஈரான் நமது நண்பனா?


Mohammad ali
அக் 27, 2024 14:40

தமிழில் நியூஸ் படிக்கவேண்டியது இங்கிலீலுசுல கருத்து போடவேண்டியது. எங்களுக்கும் இங்கிலீப்பீசு தெரியும்மங்குனிகளா


I am a Sanghi + Kafir…but not a Family slave
அக் 27, 2024 15:31

சார் விடுங்க


Duruvesan
அக் 27, 2024 16:29

எரியுதா மூர்க்ஸ்,


N.Purushothaman
அக் 27, 2024 18:46

அவர் எந்த மொழியில் எழுதினால் உங்களுக்கு என்ன ? இரு மொழி கொள்கை அப்பறம் என்ன வெங்காயத்துக்கு தமிழ்நாட்டுல இருக்கணும் ?


Kumar Kumzi
அக் 28, 2024 12:40

பார்ர்ரா உருது பேசுற மூர்க்க காட்டேரிக்கு என்னமா கோவம் வருது


M Ramachandran
அக் 27, 2024 13:33

நம் பாரத தேசமும் இந்த கொள்ளகை பின் பற்றி இருந்தால் இந்த பாகிஸ்தான் காரன் கொடச்சல் கொடுத்து கொண்டிருக்க முடியுமா? வாழ் அருந்த நரி போன்று கத்திக்கொண்டேனா ஓடியிருப்பான் .


Barakat Ali
அக் 27, 2024 11:02

இந்தியா தலையிட்டு நண்பன் ஈரானை காக்கவேண்டும்.. தொடர்ந்த போரால் இஸ்ரேலுக்கும் நன்மை விளையாது .....


aaruthirumalai
அக் 27, 2024 10:33

அட எப்படா உலகம் அழியும் சொல்லுங்கடா


VENKATASUBRAMANIAN
அக் 27, 2024 08:14

ஈரான் அந்த காலத்தில் இருந்தே இப்படித்தான். இதை யாரும் கண்டிக்க வில்லை. மற்ற இஸ்லாமிய நாடுகள் கூட ஈரானை ஆதரிக்க வில்லை.


Kasimani Baskaran
அக் 27, 2024 07:55

ஈரானுக்குள் 2000 கிலோ மீட்டர் தூரம் சென்று இலக்குகளை தாக்கி அழிப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஈரானில் இருந்துகொண்டுதான் பல அரபு நாடுகளில் தீவிரவாதம் உருவாக்கப்படுகிறது. பயிற்சியும் கொடுக்கிறார்கள்.


முக்கிய வீடியோ