உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தண்டனை அறிவித்த பெண் நீதிபதி மீது அடிக்க பாய்ந்த குற்றவாளி

தண்டனை அறிவித்த பெண் நீதிபதி மீது அடிக்க பாய்ந்த குற்றவாளி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவின் லாஸ் வேகாசில் கிளார்க் கவுண்டி மாவட்ட நீதிபதியை நீதிமன்ற அறையில் வைத்தே குற்றவாளி தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. தண்டனை அறிவித்த உடன் ஆத்திரத்தில் நீதிபதி மீது பாய்ந்து குற்றவாளி தாக்கியுள்ளார்.அமெரிக்காவில் லாஸ் வேகாஸ் நகரில் தாக்குதல் வழக்கில் கைதானவர் டியோப்ரா ரெட்டன் (30). தாக்குதலால் பாதிக்கப்பட்டவருக்கு கடுமையான உடல் சீர்கேடு உருவானதாலும், இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நிவேடா நகர நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. விசாரணை நிறைவுற்ற நிலையில், நீதிபதி மேரி கே ஹால்தஸ் என்ற 62 வயதான பெண் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். ரெட்டன் தன் குற்றத்தை ஒப்பு கொண்டதால் அவருக்கு சிறை தண்டனை வழங்கும் தனது தீர்ப்பை நீதிபதி படித்து கொண்டிருந்தார். முன்னதாக, குற்றவாளி தரப்பில், பிணையில் விடுவிக்குமாறு கோரிக்கை எழுப்பிய போது, அதனை நீதிபதி மேரி மறுத்தார்.

பாய்ந்த குற்றவாளி

கடுமையாக கோபத்தில் இருந்த குற்றவாளி ரெட்டன், நீதிபதி அமர்ந்திருக்கும் இருக்கைக்கு முன் உள்ள மேசை மீது ஏறி குதித்து நீதிபதியை தாக்கினார். நீதிபதி மேரிக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. நீதிபதிக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. குற்றவாளி ரெட்டன் மீது நீதிபதியை தாக்குதல் நடத்தியதற்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் முழுவதும் நீதிமன்ற கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. குற்றவாளி நீதிபதியை தாக்கும் வீடியோ காட்சிகள் சமுகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக வெளியான வீடியோ காட்சியில், குற்றவாளி நீதிபதி மீது தண்டனை அறிவித்த போது ஆத்திரத்தில் பாய்ந்து தாக்குகிறார். மேசையில் இருந்த கொடி சின்னங்கள் கீழே விழுந்தன. இதையடுத்து அங்குள்ளவர்களில் 3 பேர் குற்றவாளி ரெட்டனை மடக்கி பிடித்தனர். நீதிமன்றத்திலேயே ஒரு பெண் நீதிபதி மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Ramesh Sargam
ஜன 05, 2024 00:31

இப்பொழுது தண்டனை அதிகம் கிடைக்கும் அந்த தாக்குதல் செய்தவனுக்கு. கிடைக்கவேண்டும்.


sankaranarayanan
ஜன 04, 2024 21:23

இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் விரைவில் சென்னையில் நடைபெற வாய்ப்புகள் அதிகம் உண்டு.காவல் துறை கண்காணிப்பு அதிகமாக்கப்பட வேண்டும்


Senthoora
ஜன 05, 2024 05:32

தப்பு, இப்படி தப்பு தமிழ்நாட்டில் நடக்கும் உண்மையை ஆனால் அதை மத்திய அரசின் அமுலாக்கத்துறை (ED) ஊழியர்களால் நடக்கும்.


ராமகிருஷ்ணன்
ஜன 04, 2024 19:12

தமிழகத்தில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் விடியல் ஆட்சி தான் நடக்கிறது. நீதிபதிக்கு அடி உதை.சூப்பர் சென்னை நீதிமன்றம் தாக்குதல் நினைவுக்கு வருது.


Senthoora
ஜன 05, 2024 05:33

உங்க சங்கிகளின் ஆட்சியில் நடந்துகொண்டுதான் இருக்கு.


வெகுளி
ஜன 04, 2024 18:11

அண்ணன் பொன்முடிக்கு தடகள போட்டிகளில் ஆர்வம் உண்டா?...


செந்தமிழ் கார்த்திக்
ஜன 04, 2024 16:50

எந்த வித காரணம் இல்லாமல், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தொடர்ந்து மறுக்க படுகிறது.


Paraman
ஜன 04, 2024 20:14

ஆமா சென்டுமீல் கார்த்தி...ஏன் என்றால் அவரு ரொம்ப உத்தமரு, புனிதரு, மிக மிக நல்லவரு ஊழலே செய்யாதவரு....அப்பிடின்னா அவருக்கு என்னவென்றே தெரியாது அதனால்தான் அவருக்கு ஜாமீன் கடல்ல்லியே இல்லையாம்


NicoleThomson
ஜன 05, 2024 05:49

அரசு பெண் அதிகாரியை தாக்கிய செந்தில்பாலாஜியின் அடிபொடிகளை இந்த நேரத்தில் நினைவு படுத்துடீங்களே சார்


வாய்மையே வெல்லும்
ஜன 04, 2024 16:39

இந்த கேலி கூத்து இந்திய நாட்டிலும் நடக்க வாய்ப்பு ஜாஸ்தி.. என்னிக்கு தண்டனைகள் குறைகின்றனவோ குற்றவாளிகளுக்கு குளிர்விட்டு போகும்..


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை