உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கனடாவில் இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிடுவோம்; பயங்கரவாதிகள் கொக்கரிப்பு

கனடாவில் இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிடுவோம்; பயங்கரவாதிகள் கொக்கரிப்பு

வான்கூவர்: கனடாவில் உள்ள இந்திய துணை தூதரகத்தை செப்.18ம் தேதி முற்றுகையிட போவதாக காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.அமெரிக்காவை தளமாக கொண்ட காலிஸ்தானி ஆதரவு பயங்கரவாத அமைப்பு இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. செப். 18ம் தேதி கனடா வான்கூவரில் உள்ள இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு 12 மணி நேரம் போராட்டம் நடத்த போவதாக கூறி உள்ளது.அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது; 2023ம் ஆண்டு ஹர்தீப்சிங் நிஜார் படுகொலையில் இந்தியர்களின் பங்கு குறித்து விசாரணை நடத்தப்படுவதாக கனடா பிரதமர் ட்ரூடோ பார்லி.யில் அறிவித்தார். 2 ஆண்டுகள் கடந்தும் காலிஸ்தான் இயக்கத்தினரை குறி வைத்து உளவு அமைப்புகள் செயல்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அறிக்கையின் ஊடே, புதிய கமிஷனர் தினேஷ் பட்நாயக் முகத்தை காட்டும் படத்தை போட்டு அதை குறிவைப்பது போன்று போட்டோ ஒன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.கனடாவில் முந்தைய பிரதமர் ஜஸ்டின் இருந்தபோது காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். இதனால் இந்தியா- கனடா உறவு சீர்கெட்டது. ஜஸ்டின் பதவி விலகி புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், மீண்டும் காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் வாலாட்ட தொடங்கியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Thirumal Kumaresan
செப் 18, 2025 09:44

முன்னோர்கள் ஹிந்து கலாச்சரத்தை காப்பாற்ற ஏற்பட்ட மதம் தீவிரவாதிகளால் அதன் நற்பெயரை கெடுக்கிறார்கள்


ManiMurugan Murugan
செப் 17, 2025 23:30

காலிஸ்தான் பயங்கரவாதிகள் கனடாவில் இந்திய தூதரகத்தை எதற்கு முற்றுகை இட வேண்டும்.கனடா பாராளுமன்றத்தை தான் முற்றுகையிடவேண்டும்


sankaranarayanan
செப் 17, 2025 16:53

அமெரிக்காவை தளமாக கொண்ட காலிஸ்தானின் ஆதரவு பயங்கரவாத அமைப்பு இருப்பதை டிரம்பு நன்றாகவே அறிவார் அதை சமயம் வரும்போது தனக்காகவே பயன்படுத்திக்கொள்வார் ஆனால் பாம்பைப்போன்றது இந்த அமைப்பு என்றாவது ஒருநாள் நன்றாக வளர்த்த அமெரிக்காவையே அது பதம் பார்க்கும் அமெரிக்க அதிபர் டிரம்பு முதலில் இந்த தீவிர வாத அமைப்பை வேரோடு கிள்ளி எறியவேண்டும் இல்லையேல் என்றாவது ஒருநாள் வளர்த்தவர்கள் மார்பிலேயே தனது வேலையை காட்டிவிடும் பிறகு வருந்தி பயனில்லை


Kumar Kumzi
செப் 17, 2025 15:31

இந்த தேசத்துரோகிகள் கனடா வாழ் வெள்ளையர்களால் உதைத்து விரட்டப்படுவார்கள்


Santhakumar Srinivasalu
செப் 17, 2025 14:01

அன்று ட்ருடோ வின் சுயநலத்தால் இடம் பெற்ற காலிஸ்தான் கலாச்சாரம் கனடா அரசுக்கு தலைவலி!


வாய்மையே வெல்லும்
செப் 17, 2025 13:57

வெளிநாட்டில் உள்ள பஞ்சாபி சீக்கிய பயங்கரவாதிகளின் இந்திய குடியுரிமையை ரத்து செய்யவேண்டும். இல்லையேல் குறைந்த பட்சம் அவர்கள் இந்தியா வருவதென்றால் வந்தவுடனேயே அவர்களின் மேல் பிடிவாரண்ட் கொடுத்து அலேக்காக சிறையில் அடைக்கவேணும். வாலாட்டுவர்களை கட்டுக்குள் வைக்காவிடில் என்றைக்கும் தலைவலி தான்


Ramesh Sargam
செப் 17, 2025 13:43

இந்த காலிஸ்தான் தீவிரவாதிகளை ட்ரம்ப் அவர்கள் ஒழித்தால், அவருக்கு கட்டாயம் நோபல் பரிசு கொடுத்தே ஆகவேண்டும். ஒழிப்பாரா?


நிக்கோல்தாம்சன்
செப் 17, 2025 13:18

உங்களால முடியலையா இஸ்ரேல் கிட்ட சொல்லிடுங்க, அதுவும் முடியலையா அரபு மக்களிடம் சொல்லுங்க பாத்துப்பாங்க


Ganesh
செப் 17, 2025 13:03

இவர்களும் அமெரிக்காவின் செல்ல பிள்ளைகளோ?


KavikumarRam
செப் 17, 2025 12:31

இதெல்லாம் ஆயிரம் பாத்தாச்சு. என்ன பண்ணணுமோ பண்ணுங்க ஆனா கண்டிப்பா இதுக்கான ஆப்பு கணிசமா இறங்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை