உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கனடாவில் மீண்டும் ஹிந்து கோவில் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல்

கனடாவில் மீண்டும் ஹிந்து கோவில் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஒட்டாவா: கனாவில் குருத்ராவை காலிஸ்தான் பயங்கரவாதிகள் சேதப்படுத்தினர். தற்போது மற்றொரு லட்சுமி நாராயணன் ஹிந்து கோவிலை காலிஸ்தான் பயங்கரவாதிகள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கனடாவின் வான்கூவர் நகரில் உள்ள குருத்வாராவை காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். நேற்று நடந்த இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில், மற்றொரு லட்சுமி நாராயணன் ஹிந்து கோவிலை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.கோவில் சுவர்களில் மையில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்களை எழுதி வைத்துள்ளனர். சுவர்களை சேதப்படுத்தி உள்ளனர். இது குறித்து கனடாவில் உள்ள ஹிந்து அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:காலிஸ்தானி பயங்கரவாதிகளால் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள லட்சுமி நாராயண் கோவிலில் நடந்த நாசவேலையை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். ஹிந்து வெறுப்பு என்ற இந்த செயலுக்கு கனடாவில் இடமில்லை. விரைவான நடவடிக்கையை நாங்கள் வலியுறுத்துகிறோம். மேலும் வெறுப்புக்கு எதிராக அனைத்து மக்களும் ஒன்றுபட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து கனடா எம்.பி., சந்திரா ஆர்யா வெளியிட்டுள்ள அறிக்கை: பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய ஹிந்து கோவில்கள் மீதான தாக்குதல்கள் இன்றும் குறையாமல் தொடர்கின்றன. இந்த செயல் கண்டிக்கத்தக்கது.பயத்தையும், பிரிவினையையும் பயங்கரவாத சக்திகள் ஏற்படுத்த முயற்சிக்கிறது. அதிகாரிகளிடமிருந்து உடனடி நடவடிக்கையை கோர வேண்டிய நேரம் இது. மவுனமாக இருப்பதால் இனி ஒரு பயனும் கிடையாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Nachiar
ஏப் 22, 2025 16:51

தேர்தல் நடக்கும் இந்த காலத்தில் கூட ஒரு அரசியல் கட்சித் தலைவரோ எந்த ஒரு டிவி பத்திரிகை கூட ஹிந்துத்க்களின் மேலான தாக்குதலை வெளியிடவில்லை. காரணம் இந்துக்கள் ஒன்றிணைந்து வாக்கு பதிவதில்லை. அதாவது இந்துக்களுக்கு வோட்டு வாங்கி இல்லை. இம்முறை முறையாவது வோட்டு போடும் முன் கொஞ்சம் உப்பு சேர்த்து சாப்பிட்டு விட்டு வோட்டு போடுவார்களா? பக்கத்துக்கு வீட்டுக்காரனை தாக்க பாம்பு வளர்த்தால் பக்கத்து வீட்டை மட்டும் தாக்கும் என்று நம்பக் கூடாது என்று வாசித்தது ஞாபகம் வருகிறது . என்று இந்துக்கள் விழிப்பார்களோ? குரல் கொடுக்கும் அனைவருக்கும் நன்றி.


Ramesh Sargam
ஏப் 21, 2025 12:27

கனடாவில் வசிக்கும் காலிஸ்தான் தீவிரவாதிகளை முற்றிலும் ஒழிக்கும் வரை, அந்நாட்டு மக்களுக்கும், அந்நாட்டில் வசிக்கும் மக்களுக்கும் நிம்மதி இல்லை. தூக்கம் போச்சு.


திருஞான சம்பந்த மூர்த்தி தாச ஞானஸ்கந்தன்
ஏப் 21, 2025 12:47

இது அந்த நாட்டு மக்களின் பிரச்சினை அதில் நாம் இந்தளவுக்கு அதீத அக்கறை காட்டுவது என்ன காரணம்? அடுத்து அங்கிருந்த நமக்கு தீங்கிழைத்த தீவிரவாதிகளை காலம் கடந்தாவது தீர்த்துக் கட்டி விட்டோம். கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து. - குறள்


ஆரூர் ரங்
ஏப் 21, 2025 10:35

இவர்கள் கேட்கும் காலிஸ்தான் பகுதியில் பாதிக்கு மேல் பாகிஸ்தானுக்குள்ளே உள்ளது. அங்கு ஏன் போராடவில்லை?


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஏப் 21, 2025 09:45

சீக்கியர்களை ஓட்டு வங்கியாக பார்க்கும் மனநிலை மாறினாலொழிய இதற்கு தீர்வு காண்பது கடினமே.. காலிஸ்தான் தீவிரவாதிகளை மென்மையாக கையாண்டால் நாளை கனடா பெரும் விலை கொடுக்க வேண்டிவரும்.....!!!


Santhakumar Srinivasalu
ஏப் 21, 2025 08:55

இந்த மாதிரி கலவரக்காரர்களை கனடா நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை