உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள்; அடைக்கலம் கொடுப்பதை ஒப்புக்கொண்டார் பிரதமர் ட்ரூடோ!

கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள்; அடைக்கலம் கொடுப்பதை ஒப்புக்கொண்டார் பிரதமர் ட்ரூடோ!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஒட்டாவா: 'கனடாவில் காலிஸ்தானியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தை பிரதிநிதித்துவப் படுத்தவில்லை' என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பாக இந்தியா மீது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த குற்றச்சாட்டை தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. கனடா அரசு, இந்தியா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறது என மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=b9pwkh1h&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0'காலிஸ்தானியர்களுக்கு ஆதரவாக கனடா அரசு செயல்பட்டு வருகிறது. இந்திய தூதரக அதிகாரிகளுக்கு காலிஸ்தானியர்கள் மிரட்டல் விடுப்பதை கனடா அரசு வேடிக்கை பார்க்கிறது' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம் சாட்டி இருந்தார்.இந்நிலையில், ஒட்டாவாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ஜஸ்டின் ட்ரூடோ பேசியதாவது: கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் பலர் உள்ளனர். ஆனால் அவர்கள் ஒட்டு மொத்த சீக்கிய சமூகத்தை பிரதிநிதித்துவப் படுத்தவில்லை. கனடாவில் மோடி அரசாங்கத்தின் ஆதரவாளர்களும் உள்ளனர்.ஆனால் அவர்கள் ஒட்டுமொத்த ஹிந்து கனேடியர்களை பிரதிநிதித்துவப் படுத்தவில்லை. இவ்வாறு ஜஸ்டின் ட்ரூடோ பேசினார். கனடாவில் காலிஸ்தானி ஆதரவாளர்கள் இருப்பதை ட்ரூடோ ஒப்புக்கொண்டார். கனடா அரசாங்கம் காலிஸ்தானியர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறது என்ற இந்தியாவின் குற்றச்சாட்டை இது உறுதிப்படுத்துவதாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

SRIDHARAN. V
நவ 10, 2024 15:03

வோட் பேங்க் சப்போர்ட்டட்


என்றும் இந்தியன்
நவ 09, 2024 18:43

கனடா ஒவைசி தான் இவர் .அச்சு அசலாக ஒவைசி தீவிரவாத முஸ்லிம்களுக்கு சப்போர்ட் செய்வதும் இவரும் ஒரே ரகம் தான்.


Yasararafath
நவ 09, 2024 16:54

இந்தியர்களுக்கு என்ன செய்தார் ஜஸ்டின் ட்ரூட்டோ


Ganesun Iyer
நவ 09, 2024 12:35

உலகமெல்லாம் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தந்த நாட்டுக்கு துரோகம் செய்வது அவர்கள் வழக்கம். இதில் எல்லா ஒன்றுதான்...


Sankare Eswar
நவ 09, 2024 12:02

ட்ருடோ ஒரு புருடா...


Sankare Eswar
நவ 09, 2024 12:02

ட்ருடோ ஒரு புருடா...


Muralidharan raghavan
நவ 09, 2024 11:00

இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதிகளை ஆதரித்ததன் காரணமாக பாகிஸ்தானையும் பாதித்தது போன்று, சீக்கிய தீவிரவாதிகளை ஆதரித்து கனடா தவறு செய்கிறது. டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு கனடா பிரதமர் ஆதரித்தது எதனால், அவர்கள் எல்லாம் சீக்கியர்கள் என்பதால்தான். மோடி கொண்டுவந்த விவசாயிகள் சட்டத்திற்கு இந்தியாவின் வேறு எந்தமாநிலத்திலும் எதிர்ப்பு இருக்கவில்லை. தீவிரவாதிகளை ஆதரிக்கும் எந்த நாடும் உருப்படாது


Anand
நவ 09, 2024 10:51

அப்படியானால், பிரிவினைவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பவர்களை தான் முதலில் போட்டு தள்ளவேண்டும்.


Shan
நவ 09, 2024 10:39

தனியாக நாடு வேண்டும் என்று கேட்கும் உரிமையை மனித உரிமையாக ஐ.நா. பிரகடனப் படுத்தியுள்ளது. அப்படி கேட்பவரை பயங்கரவாதிகள் என்றழைப்பது மனித உரிமை மீறலாகும் இலங்கையை பிரிப்பதற்காக ஈழத்தமிழ் குழுக்களுக்கு இராணுவ பயிற்சி கொடுத்த இந்தியா இன்று இன்னொரு திசையில் செல்கிறதா?


R K Raman
நவ 09, 2024 14:38

தவறான கருத்து ஒடுக்கப்பட்டவர்கள் என்றால் தனி நாடு கேட்க நியாயம் உள்ளது. சீக்கியர்கள் இங்கு நல்ல நிலையில் உள்ளனர்


Yaro Oruvan
நவ 09, 2024 15:35

எந்த ஊரப்பா நீ ? தனி நாடு கேட்பது உரிமை . அதற்கு முறையான வழியில் போராட வேண்டும் .. குண்டு வைப்பவனும் அப்பாவி மக்களை கொல்பவனும் அதற்கு ஒரு காரணம் வைத்திருப்பான்.. அதுக்குன்னு அத அவன் உரிமை என்பதா ? இந்தியா எப்போ குழந்தைகளுக்கு ஆயுத பயிற்சி கொடுத்துச்சு ?? என்னமோ போ.. உனக்கு பொழப்பு ஓடணும்.. எவனாவது படிக்காசு அளப்பான். வாங்கி பொழச்சுக்கோ


Ganesh
நவ 09, 2024 10:26

அட புத்திசாலி கனடா பிரதமரே, இன்று இந்தியாவிலிருந்து வெளியே இருந்து தனி காலிஸ்தான் கேட்பது போல் நாளை கனடாவில் இருந்து கொண்டே தனி காலிஸ்தான் கேட்டால் என்ன செய்வாய்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை