மேலும் செய்திகள்
போராட்டங்களால் மூடப்பட்ட பிரான்ஸ் ஈபிள் டவர்
2 hour(s) ago
அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ்
2 hour(s) ago
இல்லாத போரை நிறுத்திய டிரம்ப் ஐரோப்பிய தலைவர்கள் கிண்டல்
2 hour(s) ago
பையோங்காங்: வட கொரியா சென்றுள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அந்நாட்டு அதிபர் கிம்ஜோங் உன் ஐ சந்தித்து பேசினார்.ரஷ்யாவின் நட்புறவு நாடாக வட கொரியா உள்ளது. வட கொரியா அதிபரான கிம்ஜோங் உன் ஏற்கனவே ரஷ்யாவிற்கு அரசு முறைப்பயணம் சென்றிருந்தார்.இந்நிலையில் இரு நாள் பயணமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர்புடின், வடகொரியா சென்றடைந்தார். அங்கு வடகொரியா அதிபர் கிம்ஜோங் உன் ஐ சந்தித்து பேசினர். இது நட்புறவு ரீதியான பயணம் என ரஷ்ய தரப்பில் கூறப்படுகிறது.இந்த சந்திப்பின் போது பரஸ்பரம் , ஒத்துழைப்பு, நட்புறவு குறித்து இருவரும் விவாதித்தனர். இரு நாடுகள் மீது பிற நாடுகள் தாக்குதல் தொடுத்தால் ஒருவருக்கொருவர் ராணுவ உதவியை ஏற்படுத்திக்கொள்வது உள்ளிட்ட ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.முன்னதாக சுனான் விமான நிலையம் வந்திறங்கிய புடினை விமான நிலையம் வரை சென்று வரவேற்ற கிம்ஜோங் உன், முதன்முறையாக வெளிநாட்டு தலைவர் ஒருவரை கிம்ஜோங் உன் கட்டித்தழுவி வரவேற்றதாக இணைய செய்தி நிறுவனங்கள் வீடியோ வெளியிட்டு விமர்சித்துள்ளன.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago