உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உலகின் மிகவும் மாசுபட்ட நகரம் லாகூர்!

உலகின் மிகவும் மாசுபட்ட நகரம் லாகூர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லாகூர்: உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரம் என்ற மோசமான நிலையை பாகிஸ்தான் நாட்டின் லாகூர் நகரம் எட்டியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் மிகப்பெரிய நகரம் லாகூர். இங்கு சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகம். இங்கு காற்றுக் தரக் குறியீடு 708 என்ற மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ள வருடாந்திர பாதுகாப்பு எல்லை அளவை விட 86 மடங்கு அதிக காற்று மாசுபாட்டால் லாகூர் நகரம் சிக்கி தவித்து வருகிறது.இதனால் இந்நகரில் வசிக்கும் லட்சக்கணக்கானோர் கடுமையாக பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர்.பயிர் கழிவுகள் எரிப்பாலும், 45 லட்சம் மோட்டார் சைக்கிள்கள், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட கார்கள், புகை வெளியேற்ற கட்டுப்பாடின்றி செயல்படும் தொழிற்சாலைகளாலும், இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சுகாதாரத்துறை எச்சரிக்கை

மோசமான காற்றின் விளைவுகளில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க, பஞ்சாப் மாநில மூத்த அமைச்சர் மரியம் ஒளரங்கசீப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இருமல், வைரஸ் காய்ச்சல் மற்றும் தொண்டை புண் உள்ளிட்ட சுவாச பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், மாஸ்க் மற்றும் கண்ணாடி அணிய வேண்டும் என சுகாதாரத்துறையும் எச்சரிக்கை செய்துள்ளது.

தரக்குறியீடு

0 முதல் 50 வரை - நல்ல காற்று51 முதல் 100 வரை - திருப்திகரமானது101 முதல் 200 வரை மிதமான மாசு201 முதல் 300 வரை -மோசமான மாசு301 முதல் 400 வரை - மிக மோசமான மாசு400க்கு மேல் - அபாயமான மாசு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

சலாம் கான்
அக் 30, 2024 19:48

நரகம்.


கண்ணன்
அக் 30, 2024 09:03

முழு பாக் ஏ குப்பைதான்


Kasimani Baskaran
அக் 30, 2024 05:40

முதலைகள் நிறைந்த கூவத்தை தன்னகத்தே கொண்ட சென்னையை விட வேறு எந்த ஊரிலும் மாசு அதிகமிருக்க வாய்ப்பில்லை.


J.V. Iyer
அக் 30, 2024 04:26

எங்கெங்கு பயங்கரவாதிகள், குற்றவாளிகள் அதிகமாக உள்ளனரோ அந்த நகரத்தில் மாசுக்காற்று அதிகமாக இருக்கும். கெஜ்ரிவால் உள்ள டெல்லியில் இப்படித்தான். பயங்கரவாதி அல்லது தேசவிரோதி என்ற ஒருவர் உளரேல் அவர் பொருட்டு தானாக வருமாம் மாசுக்காற்று அந்த நகரத்திற்கு


அப்பாவி
அக் 30, 2024 19:50

அப்போ ஒன்றிய அமிச்சர்களெல்லாம் எங்கே இருக்காங்க கோவாலு?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை