உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / லெபனான் பேஜர் குண்டுவெடிப்பு: கேரள வாலிபர் தொடர்பால் அதிர்ச்சி

லெபனான் பேஜர் குண்டுவெடிப்பு: கேரள வாலிபர் தொடர்பால் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சோபியா: லெபனான் பேஜர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் கேரள வாலிபரை, பல்கேரியா போலீசார் தேடி வருகின்றனர்.லெபனான் நாட்டை தளமாக கொண்டு செயல்படும் ஹிஸ்புல்லா படையினர் மீது ஒரு வாரமாக இஸ்ரேல், நுாதன தாக்குதல் நடத்தி வருகிறது. ஹிஸ்புல்லா படையினர், தங்களது தகவல் தொடர்புக்காக பேஜர் சாதனங்களை பயன்படுத்தி வந்தனர்.இதன் மூலம் தாக்குதல் நடத்த திட்டமிட்ட இஸ்ரேல் உளவுப்படை, கச்சிதமாக காய் நகர்த்தியது. ஹிஸ்புல்லா குழுவினர் ஆர்டர் செய்திருந்த பேஜர்களில் வெடிகுண்டுகளை நிறுவி, குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கச் செய்தது. தொடர்ந்து, வாக்கி டாக்கி, மொபைல் போன்களும் வெடித்தன.இந்த தாக்குதலில், இதுவரை 32 பேர் பலியாகினர்; 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.இதில் பேஜர் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல் தான் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதற்கு காரணம், குறிப்பிட்ட அந்த பேஜர்கள், ஐரோப்பிய நாடான பல்கேரியாவில் பதிவு செய்யப்பட்ட நார்டா குளோபல் லிமிடெட் கம்பனி மூலம் விற்கப்பட்டது.இந்த கம்பெனியை பதிவு செய்தவர், 37 வயதான ரின்சன் ஜோஸ். மலையாளியான இவர், கேரள மாநிலம் வயநாட்டில் இருந்து நார்வேக்கு குடிபெயர்ந்தவர். தன் நிறுவனத்தை பல்கேரியாவில் 2022 ஏப்ரலில் பதிவு செய்துள்ளார்.நார்வே தகவலின்படி, ரின்சன் ஜோஸ், முதலில் வேலைக்கு ஆள் எடுக்கும் நிறுவனத்தை நடத்தி வந்தவர். அவர் மலையாளி மக்களிடம் மிகவும் நேர்மையாக இருந்து மதிப்பு பெற்று கால்பந்து கிளப் நடத்தி வந்தார். பல விழாக்களை முன்னின்று நடத்தியுள்ளார். நார்வே நாட்டில் குடியுரிமை பெற்ற அவர், பத்தாண்டுக்கும் மேலாக அங்கு வசிக்கிறார்.அவரது குடும்பத்தினர் இன்னும் கேரளாவில் தான் வசிக்கின்றனர். இவரது தந்தை ஒரு டெய்லர். மானந்தாவடியில் டெய்லர் கடையில் வேலை செய்கிறார்.'ரின்சன் ஜோஸ், நடவடிக்கைகள் குறித்து, எங்களுக்கு தெரியாது' என்கிறார்கள் அவரது குடும்பத்தினர்.இத்தகைய சூழ்நிலையில்தான், பேஜர் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இஸ்ரேலிய உளவுப்படைக்காக, வேலை பார்த்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் ரின்சன் ஜோஸை, நார்வே, பல்கேரியா மற்றும் லெபனான் போலீஸ் படையினர் தேடி வருகின்றனர்.லெபனான் குண்டு வெடிப்பில் ஜோஸ் தேடப்படும் தகவல் பரவியதும், கேரளாவில் அவரது குடும்பத்தினர், உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Eswaran Rajasekaran
செப் 21, 2024 07:22

Congrats, bro


வாய்மையே வெல்லும்
செப் 20, 2024 23:45

திருட்டு புத்தி வேலு பிள்ளை ஹிஸ்புல் சித்து விளையாட்டுக்கெல்ல்லாம் பதிவு போடமாட்டார். அவரு ரொம்ப பிஸி. பெயரில் மட்டுமே ஹிந்துவாக காட்டிக்கொள்ளும் குள்ளநரி கூட்டம் ஆசாமியாக திகழ்பர்களை கண்டு தோலுரிக்கவேணும் ..


RAJ
செப் 20, 2024 23:01

மல்ஸ் உனக்கு ஏன் இந்த வேல.. கொல்றது ஒரு பொழப்பா ... ஏன் நம்ப நாட்டு பேரை கெடுக்கிற..


Jagan (Proud Sangi)
செப் 20, 2024 22:54

உலகுக்கு உதவிய அந்த சேட்டனுக்கு வாழ்த்துக்கள்


Raman
செப் 20, 2024 22:21

Comments of Yaro Oruvan... absolutely top class.. thoroughly enjoyed .


Jysenn
செப் 20, 2024 21:43

The Kerala gentleman has not only d history but also become a part of the history happening right before our eyes. Well done gentleman


Yaro Oruvan
செப் 20, 2024 20:48

ஹா ஹா.. நம்ம விடியல் க்ரூப் திருடனுக்கு தேள் கொட்டிய கதையா முழிப்பானுவ.. செத்தவனுக்கு ஆறுதல் சொல்லப்போனா கொன்னவன் கோவிச்சுப்பான்.. கொன்னவன கண்டிச்சா மொத்த கும்பலும் ஒத்த ஒட்டு பிச்சை போடாது.. செத்தவனுக்கு வக்காலத்து வாங்கலன்னா அந்த கும்பலும் கோவிச்சுக்கும்.. பேசலாமா இந்த நியூஸ் வந்தப்போ உப்பி அனைவரும் லீவு எடுத்துட்டு முப்பெரும் விழாவுக்கு ஒயிடுவானுவ


SUBBU,MADURAI
செப் 20, 2024 20:45

இன்றைக்கு வரைக்குமா அவர் பல்கேரியாவில் இருக்கப் போகிறார் இந்நேரம் அவர் இஸ்ரேலில் ஜாலியாக சுற்றிக் கொண்டு இருப்பார். மொஸாட் தன்னை நம்பியவர்களை ஒருபோதும் கை விடாது!


Bala
செப் 20, 2024 20:41

ஈழமக்களை இன அழிப்புச் செய்த ராணாயண் மாதிரி. பயங்கரவாதி 3/4 ராஜிவு குந்தியின் அழிவின் பொது எடுக்கப்பட்ட ஒளிஒலி நாடாவை மறைத்தவன் அந்த கொலைகார மலையாளி.


karupanasamy
செப் 21, 2024 05:42

சயனைடு