உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்வோம்; இலங்கை அதிபர் ரணில் திட்டவட்டம்!

இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்வோம்; இலங்கை அதிபர் ரணில் திட்டவட்டம்!

கொழும்பு: 'சீனாவுடன் உறவு இருந்தாலும், அதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எந்த குந்தகமும் இருக்காது என்பதை உறுதி செய்வோம்' என இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்தார்.இலங்கை அதிபர் பதவிக்கான தேர்தல் நாளை(செப்.,21) நடைபெற இருக்கிறது. செப்., 22ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்தத் தேர்தலில் மொத்தம் ஒரு கோடியே 70 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். இந்த சூழலில் இலங்கை அதிபர் பேட்டி எடுக்க ஊடகங்கள் ஆர்வம் காட்டி வருகிறது.

நெருக்கடியில் இரு நாடுகள்!

அவர் ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டி: வங்கதேசத்தில் நிலவும் பிரச்னை மற்ற அனைத்து அண்டை நாடுகளிலும், இந்தியாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இலங்கையும் வங்கதேசத்தில் கணிசமான முதலீடுகளைக் கொண்டுள்ளது. வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை குறுகிய காலத்தில் தீர்க்கப்படாவிட்டால், அது இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தும். மாலத்தீவு பொருளாதார நெருக்கடியில் உள்ளது. அவர்களுக்கு அனைத்து உதவிகளும் தேவை.

சீன உறவு

இலங்கைக்கு சீனாவுடன் நல்லுறவு உள்ளது. தொடர்ந்து நல்ல உறவு பேணுவோம். அதே வேளையில், இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எந்த விதமான குந்தகமும் ஏற்படாது என்பதை உறுதி செய்வோம். இந்தியாவின் தேசிய பாதுகாப்பு என்பதன் அடிப்படையிலேயே எங்களது சீன உறவு அமைந்திருக்கும். சீனாவுடன் உறவுகள் இருந்தாலும், அது எங்கள் நிபந்தனைகளின் அடிப்படையில் தான் இருக்கும்; அதுவும் இந்திய நலன்களுக்கு உட்பட்டதாகவே இருக்கும்.

20 மைல்கள்

இந்தியா வெறும் 20 மைல்களுக்கு அப்பால்தான் இருக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சியினர், இந்தியாவுக்கு எதிரான கடுமையான விமர்சனங்களை முன்வைக்கின்றனர். ஒருவேளை அவர்கள் வெற்றி பெற்றால், இந்திய அரசுக்கு பெரும் சவாலாக இருக்கும். இவ்வாறு இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ramesh Sargam
செப் 20, 2024 12:18

ரணில் விக்கிரமசிங்கேவுக்கு ஒரு பக்கம் சீனாவின் நட்பும் வேண்டும். அதே சமயம், எப்பொழுது சீனா முரண்டுபிடிக்குமோ, என்ன ஆகுமோ என்கிற பயமும் கூட. அந்த நேரத்தில் இந்தியாவின் தயவும், உதவியும் தேவைப்படும். ஆகையால் இப்படி இந்தியாவை விட்டுக்கொடுக்காமல் பேசுவது. இந்தியாவின் பாதுகாப்பை இவர் என்ன உறுதி செய்வது. அதை இந்தியா பார்த்துக்கொள்ளும். முதலில் நீ உன் நாட்டு பாதுகாப்பை பற்றி யோசனை செய்.


Rajah
செப் 20, 2024 11:46

இலங்கையில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சீனாவுடனான உறவை துண்டிக்க மாட்டார்கள். இந்தியாவின் ஆத்திகம் தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினால் சீனாவை ஒரு கேடயமாக பாவிக்கின்றார்கள் . இந்தியா எப்போதும் தமிழர்களை ஆதிரிப்பவர்கள் என்ற தவறான எண்ணமும் இதற்கு ஒரு கரணம். பல ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் ஆட்சியின் வெளியுறவுக் கொளகையே மற்றோரு பிரதான காரணமாகும். தமிழர்களை பொறுத்தளவில் அவர்கள் பொருளாதாரத்தில் பின்னடைவை சந்திக்கவில்லை. ஒவ்வொரு தமிழ் குடும்பத்திலும் ஒருவராவது வெளி நாடுகளில் வாழ்வதால் பொருளாதார பிரச்சனை அவர்களுக்கு இல்லை. போரினால் பல தீமைகள் ஏற்பட்டிருந்தாலும் ஒரு சில நன்மைகளில் இதுவும் ஒன்று. சிங்கள மக்களை பொறுத்தளவில் வறுமை அவர்களை வாட்டுகின்றது. இதன் காரணமாக ஒரு நல்ல தலைவரைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்து விட்டார்கள். ஒரு காலத்தில் இலங்கையின் பாதுகாவலனாக கருதப்பட்ட ராஜபக்ஷே குடும்பத்தினருக்கு 3 சதவீத வாக்குகள் கிடைப்பதே அரிது. திராவிடர்களுக்கு இது ஒரு பாடமாக அமையட்டும்.


DEENATHAYALU
செப் 20, 2024 11:43

தமிழக மீனவர் பலர் கோடி கணக்கில் அபத்தரம் விதித்த இந்த ஸ்ரீலங்கா அரசை விரட்டுவோம்


RAJ
செப் 20, 2024 11:18

அம்பாந்தோட்டவை கொடுத்திட்டு என்ன பாதுகாப்பை நீ உறுதிப்படுத்தப்போற? நீயே அதுக்குள்ள போகமுடியாது... எங்க பாதுகாப்பை நாங்க பாத்துகிறோம் .. நீ சைனாக்காரனுக்கு சாமரம் வீசு .. முட்டாப்பசங்க இந்தியாவை சுத்தி ..


கிஜன்
செப் 20, 2024 10:59

ஒரு சந்தர்பத்திலேயாவது நம்பிக்கையூட்டும்படி நடக்கிறீர்களா .... உங்களுக்கு அமெரிக்கா கிட்ட இருந்து கடன் வாங்க ஜவாப் கொடுக்க மட்டும் இந்தியா வேண்டும்.... மாலத்தீவு, இலங்கை, வங்கதேசம் .... மக்கள் இந்தியாவை பற்றி வெறுப்புடன் எழுதுவது கொஞ்ச நஞ்சமல்ல .... இந்தியர்கள் கடுமையாக உழைக்கிறார்கள் .... ஒழுங்காக வரி கட்டுகிறார்கள் .... ஜனநாயகம் நல்ல முறையில் இருக்கிறது .... அதனால் இந்தியா வேகமாக வளர்கிறது ..... முடித்தால் உழைப்பை நம்புங்கள் .... மிரட்டல் அரசியல் வேண்டாம் ....


ஆரூர் ரங்
செப் 20, 2024 10:44

சுற்றியுள்ள எல்லா நாடுகளும் கடும் பொருளாதார பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கின்றன. இந்நிலையிலும் அதிவேகமாக வளரும் பாரதத்தை மறைமுகமாக அழுத்தம் கொடுத்து சலுகைகளைக் கறக்க சீனாவுடன் நெருக்கம் காட்டி பிளாக் மெயில். இதெல்லாம் ரொம்ப நாளைக்குத் தாங்காது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை