உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அணு ஆயுதத்தை கையில் எடுப்போம்: ரஷ்யா மிரட்டல்

அணு ஆயுதத்தை கையில் எடுப்போம்: ரஷ்யா மிரட்டல்

மாஸ்கோ : நோட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா 2022 பிப்., 24ல் போர் தொடுத்தது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளுக்கும் இடையே போர் நடந்து கொண்டுள்ளது. உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் பொருளாதார உதவி, ஆயுத உதவிகளை வழங்கி வருகிறது. இதனால் உக்ரைனும் ரஷ்யாவை எதிர்த்து சண்டையிட்டு வருகிறது. இதற்கிடையில் உக்ரைன் மேற்கத்திய நாடுகளின் ஏவுகணைகளை போரில் பயன்படுத்தினால் அணு ஆயுதத்தை எடுப்போம் என ரஷ்யா பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது.ரஷ்யா பாதுகாப்பு கவுன்சில் தலைவர் மெத்வதேவ் கூறியதாவது: அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகளை ரஷ்யாவுடனான போரில் பயன்படுத்த உக்ரைன் நினைக்கிறது. இதை தற்காப்பு நடவடிக்கையாக கருத முடியாது. ஆனால் போரில் அணு ஆயுதத்தை ரஷ்யா பயன்படுத்துவதற்கான அடிப்படையான விஷயமாக இது அமையும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

NicoleThomson
ஜன 14, 2024 18:01

அமேரிக்கா மற்றும் சீனாவின் ஆயுத சந்தைக்கு ஒரு வாய்ப்பு


சந்திரசேகர்
ஜன 13, 2024 11:38

ஒரு தனி மனிதன் எடுக்கும் முடிவு மொத்த உலகத்தையும் பாதிக்கும். உக்ரைனில் போடும் குண்டு இவரது நாட்டையும் பாதிக்கும். பாவம் மக்கள். உலக உயிர்கள் அழியும் நேரம் வந்துவிட்டது


Palanisamy T
ஜன 13, 2024 07:01

ஒரு சர்வாதியாக செயல்படும் புட்டின் இப்படிப் பேசுவதில் வியப்பில்லையே கோழைத்தனமான பேச்சு, மிரட்டல். கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் இப்படி யெல்லாம் நடந்துக் கொள்ளமாட்டார்கள். போரை துவக்கியதே அவன்தான்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை