உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நோபள நாட்டில் பெரும் கலவரம் :19 பேர் பலி - அமைச்சர் ராஜினாமா

நோபள நாட்டில் பெரும் கலவரம் :19 பேர் பலி - அமைச்சர் ராஜினாமா

காத்மாண்டு : சமூக ஊடகங்களுக்கு அரசு தடை விதித்த கோபத்தில் நேபாள நாட்டு பார்லிமென்ட் வாயிலை எரித்து மாணவர்கள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். தலைநகர் காத்மாண்டுவில் நடந்த இந்த கலவரத்தில், 19 பேர் உயிரிழந்தனர். போராட்டத்தைக் கட்டுப்படுத்த கண்டதும் சுட ராணுவம் உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நம் அண்டை நாடான நேபாளத்தில், சமூக ஊடக தளங்களை ஒழுங்குபடுத்த விதிமுறைகளை உருவாக்குமாறு அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, புதிய விதிமுறைகளை உருவாக்கிய அரசு, அவ்விதிகளின் கீழ் சமூக ஊடகங்கள் தங்கள் நிறுவனங்களை அரசிடம் பதிவு செய்ய ஒரு வாரம் அவகாசம் தந்தது.இந்த அவகாசம் கடந்த 5ம் தேதியுடன் முடிவடைந்தது. அரசிடம் பதிவு செய்யாததால், 'வாட்ஸாப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யு டியூப், எக்ஸ்' உட்பட, 26 பிரபல சமூக ஊடகங்களை முடக்கி நேபாள அரசு நடவடிக்கை எடுத்தது.

ஊரடங்கு உத்தரவு

அதேவேளையில் 'டிக்டாக், நிம்பஸ், போபோ லைவ், வைபர்' போன்ற சில தளங்கள் ஏற்கனவே பதிவு செய்திருந்ததால் அவை தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.வெறுப்பு பேச்சுக்கள், வதந்திகள், இணைய குற்றங்களை கட்டுப்படுத்தவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு விளக்கமளித்தது. இருப்பினும், இந்தத் தடை, நேபாள மக்களிடையே, குறிப்பாக இளைஞர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.இதையடுத்து, அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தலைநகர் காத்மாண்டுவில் திரண்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், காத்மாண்டுவில் உள்ள பார்லிமென்டை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர்.தடுப்புகளை மீறி செல்ல முயன்றபோது, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து, கூட்டத்தை கலைக்க போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டு மற்றும் ரப்பர் தோட்டாக்களை பயன்படுத்தினர். மேலும் கண்டதும் சுடுவதற்கு ராணுவம் உத்தரவிட்டது.காத்மாண்டுவில் துவங்கிய போராட்டம் பிற பகுதிகளுக்கு பரவியதை தொடர்ந்து, அப்பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போராட்டங்கள் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து, சில பகுதிகளில் ராணுவம் குவிக்கப்பட்டது.நாடு முழுதும் நடந்த போராட்டத்தில், போலீசாருடன் நடந்த மோதலில் 19 பேர் பலியாகினர்; 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.அரசு தன் நடவடிக்கைகளுக்கு நியாயம் கற்பித்தாலும், மனித உரிமை அமைப்பினர் மற்றும் ஊடகவியலாளர்கள் இதை கடுமையாக விமர்சித்துள்ளனர். மேலும், இது கருத்து சுதந்திரத்துக்கு எதிரான அச்சுறுத்தல் என்றும் தெரிவித்துள்ளனர். சமூக ஊடகங்கள் மீதான தடையை மட்டும் மையமாகக் கொண்டு இப்போராட்டங்கள் நடைபெறுவதாக கூறப்பட்டாலும், உண்மையில் அந்நாட்டு அரசின் நிர்வாக சீர்கேடு மற்றும் ஊழல்கள் மீது மக்கள் கொண்ட அதிருப்தியின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது.

வாபஸ் வாங்க முடிவு

போராட்டங்களைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கும் உத்தரவை திரும்பப் பெறுவது குறித்து ஆராய்ந்து வருவதாக நேபாள அரசு கூறியுள்ளது.

அமைச்சர் ராஜினாமா!

போராட்டத்தை அடுத்து, நேபாள பிரதமர் சர்மா ஒலி நேற்று மாலை அமைச்சரவையை கூட்டி ஆலோசித்தார். அதேநேரத்தில் போராட்டங்களை தொடர்ந்து, நேபாள உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக், போராட்டத்தின் போது ஏற்பட்ட உயிரிழப்புக்கு தார்மீக பொறுப்பேற்று தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.ஏற்க முடியாது!ஒரு தனி மனிதன் வேலை இழப்பதைவிட தேசத்தின் சுதந்திரம் பெரியது. சட்டத்தை மீறுவது, அரசியலமைப்பை புறக்கணிப்பது, இறையாண்மையை அவமதிப்பதை எப்படி ஏற்க முடியும்? தேச நலனை பலவீனப்படுத்தும் எந்த ஒரு செயலையும் ஒருபோதும் பொறுத்துகொள்ள முடியாது.-கே.பி.சர்மா ஒலி, நேபாள பிரதமர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

RAJ
செப் 09, 2025 06:43

அமெரிக்காவின் சித்து விளையாட்டு....பங்களாதேஷுக்கு அடுத்து நேபால்....ப்லே வெள்ளையத்தேவா


Kasimani Baskaran
செப் 09, 2025 03:45

இந்தியாவில் வெறுப்பு பேச்சு என்பது சர்வ சாதாரணம். பொதுவாக சமூக வலைத்தளங்கள் கூட எந்த நடவடிக்கையும் எடுப்பது கிடையாது. உடன்பிறப்புக்கள் Digital creators என்ற அடையாளத்துடன் சுற்றித்திரிவதை பார்க்கலாம்.


தாமரை மலர்கிறது
செப் 09, 2025 01:59

நேபால் அரசு சிறந்த முடிவை எடுத்துள்ளது. சமூக ஊடகங்கள் எந்தவித கட்டுப்பாடுமின்றி லைசென்ஸ் இல்லாமல் செயல்படுகின்றன. அரசுக்கு எதிராக தவறான வதந்திகளை பரப்புகின்றன. இவற்றை இந்தியாவிலும் மூடுவது நல்லது. இந்திய இளைஞர்கள் இதை புரிந்துகொண்டுள்ளார்கள். இங்கு எந்த போராட்டமும் நடைபெறாது. விரைவில் இந்தியாவிலும் அமெரிக்காவின் யூடுபே, இன்ஸ்டாகிராம், பேஸ் புக் என்று அனைத்து சமூகஊடகத்தளங்கள் தடைசெய்யப்படவேண்டும்.


AaaAaaEee
செப் 09, 2025 01:36

அன்று திபெத் இன்று நேபால் சீனா is behind this and slowly covered/cornered india, we all dumps/idiots just talk ... then moan like slaves


Muthamil
செப் 09, 2025 01:26

தாய்நாட்டு சட்டத்தை மதிக்காத மாணவர்கள் போய் சேரட்டும்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை