உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போர்க்களத்தில் இல்லை மனித குல வெற்றி; ஐ.நா., பொதுச்சபையில் மோடி உரை

போர்க்களத்தில் இல்லை மனித குல வெற்றி; ஐ.நா., பொதுச்சபையில் மோடி உரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஐக்கிய நாடுகள்: '' மனித குலத்தின் வெற்றி என்பது, கூட்டு பலத்தில் தான் உள்ளது. போர்க்களத்தில் அல்ல,'' என ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஆற்றிய உரையில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

3வது முறை

https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fvwt99eh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 79 வது பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: ஜூன் மாதம், மனித குல வரலாற்றில் நடந்த மிகப்பெரிய தேர்தலில், 3வது முறையாக சேவை செய்ய இந்திய மக்கள் எனக்கு வாய்ப்பு வழங்கினர். உலக மக்கள் தொகையில் 6 ல் ஒரு பங்கினரின் குரலை எதிரொலிக்க இங்கு வந்துள்ளேன்.

தயார்

இந்தியாவில் 25 கோடி பேரை வறுமையில் இருந்து அகற்றியதுடன், நிலையான வளர்ச்சி என்பது சாத்தியம் என்பதை உணர்த்தி உள்ளோம். இந்த அனுபவத்தை உலகின் தெற்கு பகுதிக்கும் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளோம்.

முக்கயம்

மனிதநேயத்தின் வெற்றி என்பது கூட்டு பலத்தில் உள்ளது. போர்க்களத்தில் அல்ல. உலகளாவிய அமைதி மற்றும் வளர்ச்சிக்கு, சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தம் என்பது முக்கியம். இதனை நோக்கிய முதல் நடவடிக்கையாக ஜி20 அமைப்பில் ஆப்ரிக்கா யூனியனை நிரந்தர உறுப்பினராக சேர்க்கப்பட்டது.

அச்சுறுத்தல்

உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பயங்கரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக தொடரும் நிலையில், மறுபுறம், சைபர் பாதுகாப்பு, கடலோர பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆகியன புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இந்த விவகாரங்களில், உலகத்தின் நோக்கங்களுக்கு ஏற்ப சர்வதேச அளவிலான நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.

உறுதி

தொழில்நுட்பத்தின் பாதுகாப்பான மற்றும் பொறுப்பான பயன்பாட்டிற்கு சமமான ஒழுங்குமுறை தேவை. டிஜிட்டல் பொது கட்டமைப்பு என்பது ஒரு பாலமாக இருக்க வேண்டும். தடையாக இருக்கக்கூடாது. உலக நலனுக்காக டிஜிட்டல் பொது கட்டமைப்பை பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் ஆகியவற்றுக்கு உறுதியாக உள்ளோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

vinayagamuthu muthu
செப் 24, 2024 18:26

அப்துல் கலாம் ஐயாவின் உரையை கேளுங்கள், நம் இராணுவ பலமாக ஏன் வைக்கிறோம் என தெளிவாக அறிவுறுத்தி உள்ளார்


அப்பாவி
செப் 24, 2024 02:25

36 அப்பாச்சி எதுக்கு? மூணு லட்சம் கோடிக்கு ஏவுகணை எதுக்கு? ராமாயண, மகாபாரத் யுத்தங்களால் மக்களுக்கு பைசா பிரயோஜனம் உண்டா?


Muthu Kumaran
செப் 24, 2024 06:22

அந்நிய நாடுகள் நம்மை தாக்காமல் இருக்க, தற்காப்பு அவசியம்


Sathyanarayanan Sathyasekaren
செப் 24, 2024 07:34

சம்ச்சா நேரு இப்படித்தான் பேசி சீனா படையெடுத்து வந்த பொது தோற்கடிக்கப்பட்டோம். பக்கத்தில் இரண்டு பயங்கரவாத நாடுகளை வைத்துக்கொண்டு இப்படியொரு கேள்வியை கேட்ட நீ அப்பாவி அல்ல. துரோகி.


Nallavanaga Viruppam
செப் 23, 2024 22:27

நம்ப பேசலாம். அதிக வருமானம் ஆயுதம் விற்பதில் தான் உள்ளது. ஒரு நாட்டை பலவீனப்படுத்தி, தமக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்குவதே வல்லரசாகும். ஒத்துழையாமை அமைதி எல்லாம் பின்பற்றினால் தள்ளி தான் நிற்கவேண்டும் எப்போதுமே.


Ramesh Sargam
செப் 23, 2024 22:16

பாவம் மோடிஜியும் எவ்வளவோ முயல்கிறார் உக்ரைன் ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவர. போரிடும் இரண்டு நாட்டு அதிபர்களும் இவர் அறிவுரையை செவிமடுத்தால்தானே... இரண்டு நாட்டு அதிபர்களையும் தனித்தனியாக சந்தித்தும் பேசிவிட்டார். அப்படியும் அவர்கள் இவர் பேச்சை கேட்கத்தயாராக இல்லை. பாதிக்கப்படுவது, போரில் பலியாவது அவர்கள் நாட்டு மக்கள் என்கிற எண்ணமாவது அவர்களுக்கு இருக்கவேண்டும். அதுவும் இல்லையென்றால்....


Velan Iyengaar
செப் 23, 2024 21:47

மனித குலத்தின் வெற்றி ப்ராம்ப்ட்டார் என்ற ஒரு பொருளில் உள்ளது ......


N Sasikumar Yadhav
செப் 23, 2024 22:19

திருட்டு திராவிட மாடல் மொதல்வர் துண்டுச்சீட்டை பார்த்தும் தப்புதப்பாக படிக்கிறார் என்பதற்காக மோடிஜிமீது பொறாமைப்பட்டு புலம்புகிறார்


Velan Iyengaar
செப் 24, 2024 08:04

எங்க அப்பன் குதுரு க்கு உள்ள இல்ல என்று ஓடி வர்றான் பாருங்க ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை