உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரூ.13,000 கோடி மோசடி செய்த மெஹுல் சோக்சி; இந்தியாவிடம் ஒப்படைக்க பெல்ஜியம் நீதிமன்றம் உத்தரவு

ரூ.13,000 கோடி மோசடி செய்த மெஹுல் சோக்சி; இந்தியாவிடம் ஒப்படைக்க பெல்ஜியம் நீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி: வங்கியில், 13,000 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்து, வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய வைர வியாபாரி மெஹுல் சோக்சியை இந்தியாவிடம் ஒப்படைக்க பெல்ஜியம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த மெஹுல் சோக்சி, அவரது உறவினர் நிரவ் மோடி இணைந்து வைர வியாபாரம் செய்து வந்தனர். அவர்கள், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில், 13,000 கோடி ரூபாய் கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல், 2018ல் வெளிநாடு தப்பிச் சென்றனர்.ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் நிரவ் மோடி, 2019ல் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியா அழைத்து வரும் முயற்சிகள் நடந்து வருகின்றன. மற்றொரு குற்றவாளியான மெஹுல் சோக்சி, 2018ல் அமெரிக்கா தப்பி சென்றார். அங்கிருந்து, தீவு நாடான ஆன்டிகுவா சென்று குடியேறினார். அவர், ஏற்கனவே அந்த நாட்டின் குடியுரிமை பெற்றுள்ளார். ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மெஹுல் சோக்சி, ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இதைத் தொடர்ந்து, சோக்சியை பெல்ஜியம் போலீசார் கைது செய்து அந்நாட்டு சிறையில் அடைத்தனர். அவர் ஜாமின் கோரி நீதிமன்றத்தை நாடி இருந்தார்.இதற்கிடையே, மத்திய அரசு, அவரை நாடு கடத்தும் முயற்சியை துவங்கியது. இந்நிலையில்,வைர வியாபாரி மெஹுல் சோக்சியை இந்தியாவிடம் ஒப்படைக்க பெல்ஜியம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் கோரிக்கையின் பேரில் பெல்ஜிய அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டது செல்லுபடியாகும். அவரை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கு அனைத்து முயற்சிகள் நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர். சோக்சி உயர் நீதிமன்றத்தில் இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது. சோக்சி இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால், மும்பையில் உள்ள ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்படுவார் என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

அப்பாவி
அக் 18, 2025 17:28

இப்பிடியே கொஞ்ச நாள் இழுத்தடிச்சா அந்தாள் போய்ச் சேந்துருவான். ஏகப்பட்ட வியாதி இருக்காம்.


பாலாஜி
அக் 18, 2025 08:20

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டாலும் பல லட்சம் கோடிகள் மோசடி செய்த பிரபல நபர்கள் எவருக்கும் எந்த தண்டனையும் கிடைக்காது.


karuththuraja
அக் 18, 2025 05:08

விரைவில் அதற்க்கான பார்மாலிட்டீஸ் செய்து இந்தியா கொண்டுவந்து முதலில் 13000 கோடி வட்டியுடன் பறிமுதல் செய்யவும்.....


Senthoora
அக் 18, 2025 06:26

13000 கோடியாவது ஒரு கோடியும் கிடையாது.மெஷூல் சோக்ஷி பெல்ஜியத்தில் டெபாசிட் செய்த பணம் பத்தாது என்றுதானே, இந்தியாவுக்கு அனுப்புறாங்க,


தாமரை மலர்கிறது
அக் 17, 2025 22:20

மோசடி செய்துவிட்டு உலகில் எங்கு ஒளிந்தாலும், பிஜேபி அரசு பிடித்துவந்து இந்தியாவில் தண்டிக்கும். காங்கிரஸ் போல வெளியே விட்டு வேடிக்கை பார்க்காது.


Senthoora
அக் 18, 2025 06:35

சிரிப்பு வருது, விஜய் மல்லையா, இன்னும் பலர் இருக்கிறாங்க, எப்ப சார் வருவாங்க. பதவிக்கு வந்து 100 நாளில் கறுப்புப்பணம் வரும் என்றாரே, இன்னுமா நம்புறீங்க. இந்த அரசியால் வாதிகளை நம்பாதீங்க. உழைத்தோம், சாப்பிட்டோமா, தூங்குவோம்.வளர்ந்த நாடுகளிலும் போராடி இப்போ மக்கள் உழைப்பை நம்பி சிக்கனமா வாழுறாங்க. இன்று இந்தியாவில் தான் அதிக I phone apple brand பவிக்கிறாங்க, அதில பாதிக்குமேல் பலருக்கு பாவிக்கவே தெரியாது. மேல் நாடுகளில் வெறும் 30% தான், மீதிப்பேர் phone இக்கு $150 to $200 ௮௦௦௦.௦௦மேல் வாங்க மாட்டாங்க.