உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மிஸ் யுனிவர்ஸ் போட்டி; மெக்சிகோ அழகி பாத்திமாவுக்கு மகுடம்!

மிஸ் யுனிவர்ஸ் போட்டி; மெக்சிகோ அழகி பாத்திமாவுக்கு மகுடம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தாண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் அழகியாக மெக்சிகோ நாட்டை சேர்ந்த பாத்திமா போஷ், 25, தேர்வு செய்யப்பட்டார்.'மிஸ் யுனிவர்ஸ்' என்பது சர்வதேச நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொள்ளும் வருடாந்திர போட்டியாகும். இந்தாண்டுக்கான போட்டி, தாய்லாந்தில் உள்ள இம்பாக்ட் சேலஞ்சர் ஹாலில் நடந்தது. இந்தியா சார்பில் மணிகா விஸ்வகர்மா போட்டியிட்டார். 100க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த அழகிகள் போட்டியில் கலந்து கொண்டனர்.போட்டியின் இறுதி சுற்றில், மெக்சிகோ நாட்டை சேர்ந்த பாத்திமா போஷ் வெற்றி பெற்று, 2025ம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை தட்டி சென்றார். முதல் ரன்னர் அப் ஆக தாய்லாந்து அழகியும், இரண்டாம் ரன்னர் அப் ஆக வெனிசுலா அழகியும் தேர்வு செய்யப்பட்டனர்.வெற்றி பெற்ற பாத்திமா, நடனம் ஆடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.இறுதிப்போட்டியின் நடுவர்களில் ஒருவராக பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் பணியாற்றினார். இந்தியா சார்பில் போட்டியிட்ட மணிகா விஸ்வகர்மாவால் முதல் 12 இடங்களுக்கு வரமுடியவில்லை. அவர் முன்னதாக நடந்த ஸ்விம் சூட் போட்டியில் தோல்வியை தழுவி வெளியேறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை