உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மோடி என் சிறந்த நண்பர்: மீண்டும் சொல்கிறார் டிரம்ப்

மோடி என் சிறந்த நண்பர்: மீண்டும் சொல்கிறார் டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: மோடி என் சிறந்த நண்பர். அவருடன் இணைந்து இந்தியாவுடனான உறவை வலுவாக்குவேன் என்று அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதலுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபருக்கான தேர்தல் வரும் நவ.,5ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், தற்போதைய துணை அதிபருமான கமலா ஹாரிஸ், முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகின்றனர். பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து, இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதலில் கமலா ஹாரிஸ் முன்னிலை பெற்றிருந்த நிலையில், தற்போது டிரம்ப்புக்கான ஆதரவு பெருகியிருப்பது கருத்துக் கணிப்புகளில் தெரிய வந்துள்ளது. மேலும், இந்தத் தேர்தலில் இந்திய வம்சாவளியினரின் ஓட்டுக்கள் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளன. எனவே, இந்திய வம்சாவளியினரின் ஓட்டுக்களை கவர்வதற்கு இரு வேட்பாளர்களும் முயன்று வருகின்றனர். குறிப்பாக, கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதால், எப்படியாவது அவரை பின்னுக்குத் தள்ளி, அமெரிக்காவாழ் இந்தியர்களின் மனதில் இடம் பிடித்திட வேண்டும் என்று டிரம்ப் முனைப்பு காட்டி வருகிறார். இந்த நிலையில், இந்தியர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறிய டிரம்ப், வங்கதேசத்தில் ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். எனது ஆட்சியில் இதுபோன்று நடந்திருக்காது. அமெரிக்கா மட்டுமல்லாது, உலகம் முழுவதும் உள்ள ஹிந்துக்களை கமலா ஹாரிஸூம், ஜோ பைடனும் புறக்கணிக்கின்றனர். அமெரிக்காவில் ஹிந்துக்களை பாதுகாப்பதோடு, அவர்களுக்கு எதிரான நிறவெறி தாக்குதலை தடுத்து நிறுத்துவோம். எனது ஆட்சியில் உங்களின் சுதந்திரத்திற்காக போராடுவோம். எனது சிறந்த நண்பர் மோடியுடன் இணைந்து இந்தியாவுடன் உறவை வலுவாக்குவோம். அதிக வரி மற்றும் விதிமுறைகளை உருவாக்கி சிறு தொழில்களை கமலா ஹாரீஸ் அழித்து விட்டார். ஆனால், நானோ, அவற்றை எல்லாம் ரத்து செய்து, வரலாற்றில் இல்லாத வகையில் பொருளாதாரத்தை உயர்த்தினேன். மீண்டும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சிறந்த அமெரிக்காவை உருவாக்குவேன். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள், எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Matt P
நவ 01, 2024 22:05

முதலில் கமலா ஹாரிஸ் முன்னிலை பெற்றிருந்த நிலையில், தற்போது டிரம்ப்புக்கான ஆதரவு பெருகியிருப்பது கருத்துக் கணிப்புகளில் தெரிய வந்துள்ளது....கருத்து கணிப்பு தோல்வியுறலாம். . கமலா ஹாரிஸ் வெற்றி பெறலாம்


Matt P
நவ 01, 2024 22:00

Trump க்கு உலக தலைவர்கள் எல்லோரும் நண்பர்கள் தான். ரசிய பிரதமர். வட கொரியா அதிபர் நெருங்கிய நண்பர்கள். நேற்று கூட தொலை பேசியில் பேசினேன் என்பார். இப்போது மோடி நண்பர். அதனால் இந்திய வாக்குகளை எதிர்பார்க்கிறாரோ என்னவோ.


Easwar Kamal
நவ 01, 2024 17:26

ஒட்டு போடாமல் வெளியில் இருந்து trumpanukaga கோவளம். 2020ல் இந்தியர்கள் ஒட்டு கமலா/biden கூட்டணிக்குத்தான் சென்றது. இப்போதும் இந்திய சமுதாயதின் ஒட்டு அதே 70% kamalavuthan போகிறது. இதை தடுக்க நம்ம trumpan பல வகைகளில் வழக்கம் போல ட்ராமா செய்கிறார். ஒபாமா காலத்தில்தன இந்தியாவுடன் நட்பு பல பட்டது. அதற்கு முன்னர் இருந்த புஷ் அலலது டிரம்ப் காலத்தில் பெரிய அளவில் ஒன்றும் நடக்கவில்லை. நல்லா வரியை மற்றும் ஏத்தி விட்டாச்சு இப்போ இந்தியர்கள் பெரிதும் பாதிப்பு உள்ளகியாச்சு அது மட்டுமா கிறீன் கார்டு /குடியுரிமை எல்லாமே பல ஆண்டுகள் தள்ளி போய் விட்டது. biden இதை சிறிது சரி செய்தார். அதுக்காக முழுவதும் தூக்கி கொடுத்தால் இந்த ஆந்திர கரனுங்கதான் அமெரிக்காவில் இருப்பானுங்க அதிலும் குரூப்பிஸம் பண்ணி மற்ற மொழி மக்கள் பேசும் குறிப்பாக தமிழ் மக்கள் வளர விடாம சாதி செய்வானுங்க. இதை நான் பல இடங்களில் கண் கூடாக கண்டு உள்ளான். எல்லாம் அளவு அரிஞ்சுதான் செய்ய முடியும். உடனே இந்திவுக்கு தூக்கி கொடுக்க முடியாது. இந்தியாவும் அமெரிக்கா என்றல் என்ன வேண்டுனாலும் செய்ய முடியாது. நட்பு நடன ரஷ்யாவும் உள்ளது. இதை புரிந்து கொள்ள வேண்டும்.


Kanns
நவ 01, 2024 14:44

With Best Wishes to Donald Trumpfs Win in Upcoming USA Elections for SafeGuarding the Humanity& WorldPeace from 03MostDangers to Humanity& WorldPeace And Better Indo-US Cooperations


Ramesh Sargam
நவ 01, 2024 11:55

அமெரிக்க வளர்ச்சியில் இந்தியர்களின் பங்கு அபரிமிதம். அதை நினைவில் கொண்டு ட்ரம்ப் இந்தியரக்ளுக்கு உதவிடவேண்டும். அப்படி செய்தால் இந்தியர்களின் ஆதரவு உண்டு.


Barakat Ali
நவ 01, 2024 09:56

அதே நட்பை வெச்சு, இவர் ஜனாதிபதி ஆனால் காலிஸ்தான் தீவிரவாதி பன்னூனை இந்தியாவிடம் ஒப்படைப்பாரா ????


ஆரூர் ரங்
நவ 01, 2024 10:40

கோர்ட் கள் மனித உரிமைகளை காரணம் காட்டி அவனுக்கு பாதுகாப்பளிக்கும். நிதி மோசடி மற்றும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து விதவிதமாக சம்பாதிக்கும் உரிமை பிரிட்டனுக்கு மட்டுமா என்ன?


Barakat Ali
நவ 01, 2024 09:52

இந்த விஷயம் மோடிக்குத் தெரியுமா ????


Srinivasan Krishnamoorthi
நவ 01, 2024 09:44

இப்படியெல்லாம் பேசி இந்தியர் ஓட்டுக்களை கவருவதற்கு கேவலமான வார்த்தை தோணுது. லீடர் என்கிற நிலையில் இருந்து விழுந்து விட்டார் டிரம்ப்


M P Haran
நவ 01, 2024 09:09

ஜோ பைடன், கமலா ஹாரிஸ், ஒபாமா என்ற ஒரு கூட்டம் இந்தியாவின் வளர்ச்சியை விரும்பாத, வளர்ச்சிக்கு இடைஞ்சல் உண்டுபண்ணும் டெமாக்ரேட்ஸ் கூட்டம். இந்தக்கூட்டம் பதவிக்கு வருவது நம் நாட்டிற்கு ஊறு மட்டுமே விளைவிக்கும். டோனல்ட் ட்ரம்ப் போட்டியிடும் ரிபப்ளிகன் கட்சி வெற்றிபெற்று பதவிக்கு வருவதே இந்தியாவுக்கு நன்மை பயக்கும்.


Palanisamy Sekar
நவ 01, 2024 08:03

மீண்டும் மீண்டும் அவர் சொல்லத்தான் செய்வார். உலகத்தலைவர்களின் மனதில் பச் என்று ஒட்டிக்கொண்டவர் மோடிஜி. அதிலும் இப்போது தேர்தல் வேறு அமெரிக்காவில். அங்கே உள்ளவர்களில் எல்லோருமே மோடிஜியின் ஆதரவாளர்கள் என்பதை கூடுகின்ற கூட்டத்தில் மோடி மீதான நேசத்தை கண்டோம். அதனால் ட்ரம்ப் மட்டுமல்ல அனைவருமே சொல்வார்கள். இதில் இங்கே உள்ளவர்களுக்கு கொழுந்துவிட்டு எரியும் சொல்ல முடியாத இடமெல்லாம். இந்த செய்தியை பிற ஊடகங்கள் ஏன் மறைகின்றன என்றுதான் தெரியல.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை