உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிணைக்கைதிகளின் பட்டியலை தராவிட்டால் போர் நிறுத்தம் இல்லை: இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை

பிணைக்கைதிகளின் பட்டியலை தராவிட்டால் போர் நிறுத்தம் இல்லை: இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம்: பாலஸ்தீனத்தில் இருந்து விடுவிக்கப்படும் 33 பிணைக் கைதிகளின் பட்டியலை, ஹமாஸ் பகிர்ந்து கொள்ளாத வரையில் காசா போர் நிறுத்த உடன்படிக்கையை முன்னெடுக்கப் போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகள், மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் நுழைந்து, 2023 அக்., 7ல் தாக்குதல் நடத்தினர். அப்போது, 200க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை அவர்கள் கடத்திச் சென்றனர். இதனால் கோபமடைந்த இஸ்ரேல், காசா மீது தாக்குதலை தொடர்ந்தது. அந்நாட்டு படைகள் நடத்திய தாக்குதல்களில், காசாவில், 40,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். போர் நிறுத்தம் தொடர்பாக, இஸ்ரேல் - ஹமாஸ் இடையே, அமெரிக்கா, எகிப்து, கத்தார் உள்ளிட்ட நாடுகள் மத்தியஸ்தம் செய்து வந்தன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=j41fhfny&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இஸ்ரேல் - ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம், இன்று காலை முதல் அமலுக்கு வருகிறது. இந்த ஒப்பந்தத்தின்படி, 33 பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் பயங்கரவாதிகள் முடிவு செய்துள்ள நிலையில், அதற்கு ஈடாக, இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 737 பாலஸ்தீனியர்கள் விடுதலையாகின்றனர். இந்நிலையில், பிணைக் கைதிகளின் பட்டியலை தராவிட்டால் போர் நிறுத்தம் இல்லை என ஹமாஸ் அமைப்புக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.அவர் சமூக வலைதளத்தில், வெளியிட்டுள்ள பதிவு கூறியிருப்பதாவது: ஒப்புக் கொள்ளப்பட்டபடி விடுவிக்கப்படும் பணயக்கைதிகளின் பட்டியலைப் பெறும் வரை நாங்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்துடன் முன்னேற மாட்டோம். ஒப்பந்தத்தை மீறுவதை இஸ்ரேல் பொறுத்துக் கொள்ளாது. முழுப் பொறுப்பும் ஹமாஸிடம் உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Sridhar
ஜன 19, 2025 12:02

ஒரு ஒழுக்கத்துக்கு கட்டுப்படாத தீவிரவாத கும்பலோடு "ஒப்பந்தம்" போட்டுட்டு அவனுக அதை மதிச்சு செயல்படுவானுங்கனு எதிர்பார்க்கிறது முட்டாள்தனம் இல்லையா? மொத்தமா ஒரே போட்டுப்போட்டு எல்லா தீவிரவாதிகளையும் அழிக்கற விட்டுட்டு, அவனுகளோட போய் யாராவது "ஒப்பந்தம்" போடுவார்களா?


Duruvesan
ஜன 19, 2025 09:49

ஹமாஸ் கடைசி மூர்கன் உள்ள வரை அமைதி கெடைக்காது, நீங்க சொன்னது தான், அரசியல் வாதின்ன எல்லாத்தையும் மறந்துடுவாங்க


Laddoo
ஜன 19, 2025 09:08

பயங்கரவாதிகளுடன் பேச்சு வார்த்தை சரியான முன்னெடுப்பு அல்ல. 33 அப்பாவிகளுக்கு 770 தீவிரவாதிகளா? சரிபட்டுவரும்னு தோணல.


R. SUKUMAR CHEZHIAN
ஜன 19, 2025 07:53

நம் நண்பன் இஸ்ரேலை ஆதரிப்போம், அவர்கள் நம் நாட்டிற்கு துரோகம் இழைத்தது இல்லை. இஸ்ரேல் தன் எதிரிகளை ஒழித்து கொண்டே சமாதானம் பேச வேண்டும், இந்த ஈன கும்பல்களை ஒழிந்தால் தான் உலகத்தில் அமைதி ஏற்படும் இதற்கு இஸ்ரேலுக்கு நாம் துணை நிற்போம்.????


MARI KUMAR
ஜன 19, 2025 07:41

இவருக்கு இதை விட்டால் வேற வேலை கிடையாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை