உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிரிட்டன் அமைச்சருடன் நிதின் கட்காரி சந்திப்பு

பிரிட்டன் அமைச்சருடன் நிதின் கட்காரி சந்திப்பு

லண்டன் : பாரதிய ஜனதா தலைவர் நிதின் கட்காரி, பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹக்கை சந்தித்து பேசினார். பிரிட்டனில் ஒருவார கால பயணம் மேற்கொண்ட பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி, லண்டனில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹக்குடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

இது குறித்து, நிதின் கட்காரி குறிப்பிடுகையில், ''பாகிஸ்தானுடன் இந்தியா, ஆக்கபூர்வமான பேச்சு வார்த்தை துவக்குவதற்கு முன்பாக, பயங்கரவாத முகாம்களை ஒழிக்கும்படி, அந்நாட்டை பிரிட்டன் வற்புறுத்த வேண்டும் என, ஹக்கிடம் கேட்டுக் கொண்டேன். பாகிஸ்தான் பிரதமர் சமீபத்தில் ஹக்கை சந்தித்துள்ளார். இந்தியாவை போல, பொருளாதார முன்னேற்றத்தில் கவனம் செலுத்தும்படி, பாகிஸ்தான் பிரதமரிடம் ஹக் கேட்டுக் கொண்டுள்ளார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பொருளாதார உறவு மேம்பட வேண்டும் என, ஹக் விரும்புகிறார்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்