உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / புரதத்தின் வடிவத்தை ஆய்வு செய்த மூவருக்கு வேதியியலுக்கான நோபல்

புரதத்தின் வடிவத்தை ஆய்வு செய்த மூவருக்கு வேதியியலுக்கான நோபல்

ஸ்டாக்ஹோம்: வேதியியலுக்கான நோபல் பரிசு, புரதத்தின் வடிவத்தை கண்டறிந்த ஆய்வுக்காக வேதியியலாளர்கள் டேவிட் பாக்கர், டென்னிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜான் ஜம்பர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. ஐரோப்பிய நாடான ஜெர்மனியைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக ஒவ்வொரு ஆண்டும், அறிவியல், இலக்கியம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் தலை சிறந்து விளங்கியவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.நோபல் பரிசு பெறுவோர் பதக்கத்துடன், 8.4 கோடி ரூபாய் ரொக்கப் பரிசையும் பெறுவர். ஒன்றுக்கும் மேற்பட்டோர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டால், இந்த பணம் சமமாக பகிர்ந்தளிக்கப்படும். இந்தாண்டுக்கான நோபல் பரிசு அக்., 7 முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது.வேதியியல் துறையில் சாதனை படைத்தற்காக டேவிட் பாக்கர், டெமிஸ் ஹசாபிஸ், ஜான் ஜம்பர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் பாக்கர் வாஷிங்டன் பல்கலையில் பணிபுரிகிறார். ஹசாபிஸ் மற்றும் ஜான் ஜம்பர் பிரிட்டனின், லண்டனில் கூகுள் டீப் மைண்ட் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.வேதியியலில் புரதத்தின் முப்பரிமாண வடிவத்தை தெரிந்திருப்பதன் வாயிலாக அதன் செயல்பாடு, பிற மூலக்கூறுகளுடன் எவ்வாறு வினை புரிகிறது மற்றும் புரத அமைப்புக்கு ஏற்ற மருந்துகள் ஆகியவற்றை கண்டறிய முடியும். ஆனால், இதை கணிப்பது மிகவும் கடினமான செயல். இந்நிலையில், நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள விஞ்ஞானிகளில் இருவரான ஹசாபிஸ் மற்றும் ஜம்பர் ஆகியோர் அமினோ அமிலங்கள் வரிசைக்கும், புரத அமைப்புக்கும் இடையிலான தொடர்பை கண்டறிந்துள்ளனர். மேலும், செயற்கை நுண்ணறிவு மாடலை பயன்படுத்தி இரண்டு கோடிக்கும் அதிகமான புரதங்களின் முப்பரிமாண அமைப்பை மெய்நிகர் முறையில் கன்டறிந்துள்ளனர்.இதேபோல் மற்றொரு விஞ்ஞானியான டேவிட் பாக்கர் கணினி முறையில் பல்வேறு வடிவங்களில் புரதங்களை உருவாக்கியவர். இந்த புரதங்கள் மருந்துகள், தடுப்பூசிகள், நானோ பொருட்கள், சிறிய சென்சார்கள் தயாரிக்க பயன்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை