உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நோபல் பரிசு பெற்றவருக்கு மோசடி வழக்கில் 6 மாதம் சிறை

நோபல் பரிசு பெற்றவருக்கு மோசடி வழக்கில் 6 மாதம் சிறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: பங்களாதேஷில், வங்கி மோசடி வழக்கில் நோபல் பரிசு பெற்றவருக்கு அந்நாட்டு கோர்ட் 6 மாதம் சிறை தண்டனை விதித்தது.வங்க தேசத்தைச் சேர்ந்தவர் பொருளாதார நிபுணர் முகமது யூனிஸ்,83 இவர் வறுமை ஒழிப்பை தனது குறிக்கோளாக கொண்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டமைக்காக 2006-ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார். கடந்த 1983-ம் ஆண்டு நிறுவிய மைக்ரோ கிரிடிட் கிராமிய வங்கியில். தொழிலாளர் சட்டத்தினை மீறியதாகவும், தொழிலாளர் நல நிதிகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்தாக குற்றம் சாட்டப்பட்டது.இது தொடர்பாக தொழிலாளர் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் முகமது யூனிஸ் உள்ளிட்ட மூவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 6 மாத சிறை தண்டனையும் அபராதமும் விதித்து நீதிபதி ஷேக் மெரினா சுல்தானா தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

thangam
ஜன 02, 2024 09:46

அங்கு வேண்டாம்.. இங்கு வாருங்கள். கழகத்தில் சென்ற்து பணியாற்ற.


Sampath Kumar
ஜன 02, 2024 09:15

படித்த திருடர்ர்ர் போல


raja
ஜன 02, 2024 07:47

சர்வாதிகாரியாக ஆட்சியில் நல்லவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப் படுகிறார்கள்..... சர்வாதிகாரி ஆட்சி விரட்டி அடிக்க பட்டு ஜனநாயக ஆட்சி மலர வேண்டும்..


ஆரூர் ரங்
ஜன 02, 2024 10:53

அங்குள்ள எதிர்கட்சிகள் மதஅடிப்படைவாதம் மூலம் பல கலவரங்களை நிகழ்த்தியுள்ளனர் .???? அவர்களை விட BNP ஹசீனாவே தேவலாம்


T.Senthilsigamani
ஜன 02, 2024 06:02

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமா ? இந்த நோக்கில் விசாரிப்பது நல்லது


Ramesh Sargam
ஜன 02, 2024 01:04

இவரால் அந்த நோபல் பரிசின் மதிப்பே குறைந்தது


Kasimani Baskaran
ஜன 01, 2024 22:03

நோபல் பரிசு பெற்றிருந்தால் மோசடி செய்யக்கூடாது என்று விதி இருக்கிறதா?


ஆரூர் ரங்
ஜன 01, 2024 21:57

இவர்தான் முதல்முதலாக பெண்களுக்கு சுயஉதவிக் குழுக்கள், மைக்ரா கிரெடிட் நிறுவனங்கள் அமைத்து வழிகாட்டிய நபர். காலத்தின் கொடுமை.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை