உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நார்வே செஸ் தொடர்: கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!

நார்வே செஸ் தொடர்: கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்டாவஞ்சர் : நார்வே செஸ் தொடரின் மூன்றாவது சுற்றில், உலகின் நம்பர் ஒன் வீரரான கார்ல்சனை, இந்தியாவின் பிரக்ஞானந்தா வீழ்த்தினார். 'கிளாசிக்கல்' முறையில், கார்ல்சனை, பிரக்ஞானந்தா வீழ்த்துவது இதுவே முதன்முறை ஆகும்.நார்வேயில் சர்வதேச செஸ் தொடர் நடக்கிறது. ஐந்து முறை உலக சாம்பியன் கார்ல்சன் (நார்வே), நடப்பு உலக சாம்பியன் டிங் லிரென் (சீனா), இந்தியாவின் பிரக்ஞானந்தா உட்பட 6 பேர் ஓபன் பிரிவில் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு சுற்றிலும் இரு முறை மோத வேண்டும்.இதன் முதல் சுற்றில் வெற்றி பெற்ற பிரக்ஞானந்தா, இரண்டாவது சுற்றில், டிங் லிரெனிடம் தோல்வி கண்டார். இந்நிலையில், இன்று நடந்ததை மூன்றாவது சுற்றில் கார்ல்சனை எதிர்கொண்டார். இதில் வெள்ளை காய்களை கொண்டு விளையாடிய பிரக்ஞானந்தா, அபாரமாக செயல்பட்டு கார்ல்சனை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம், 5.5 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Bala Iyer
மே 30, 2024 13:35

கிரேட் உனது எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் நீ, அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் உலகின் தலை சிறந்த செஸ் வீரனாக வாழ்த்துக்கள்.


தமிழ்
மே 30, 2024 12:31

வாழ்த்துக்கள் பிரக்ஞானந்தா. இவ்வளவு சிறிய வயதில் இவ்வளவு சாதனைகளை கடவுளின் ஆசீர்வாதம் இல்லாமல் செய்யமுடியாது. இன்னும் பல சாதனைகளை இவர் செய்யவேண்டும்.


ArGu
மே 30, 2024 12:27

வேகமாய் வாள் வீசு வீரா


S Ramkumar
மே 30, 2024 11:17

வாழ்த்துக்கள்


enkeyem
மே 30, 2024 10:55

தமிழக ஆர் எஸ் பி ஊடகங்கள் அனைத்தும் இந்த செய்தியை ப்ரக்ஞாநந்தாவின் நெற்றியில் திருநீறு இல்லாமல் வெளியிட்டு புளகாங்கிதம் அடைந்து கொள்வார்கள்


அருணாசலம்
மே 30, 2024 12:07

செய்தியே வெளிவராது.


Natarajan Ilanchezhiyan
மே 30, 2024 10:32

காங்கிரதுலேஷன்ஸ்


Anonymous
மே 30, 2024 09:49

அருமை, அருமை. வாழ்த்துக்கள்


Svs Yaadum oore
மே 30, 2024 09:11

நெற்றியில் விபூதியை பார்த்தால் விடியல் மத சார்பற்ற மேய்ப்பர் உபிஸ்களுக்கு அப்படியே எரியுமே


தமிழ்
மே 30, 2024 12:33

எங்களுக்கு எங்கேயும் எரியவில்லை. நீங்கள் அவரை புகழ்வதுபோல் நடித்து கீழே தள்ளாமல் இருந்தால் சரி.


சுந்தர்
மே 30, 2024 08:23

வாழ்த்துக்கள்.


Kasimani Baskaran
மே 30, 2024 08:18

? ? ?


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி