உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மனைவிகள் 6 பேர்; குழந்தைகள் 10 ஆயிரம் பேர்; உலகை கவர்ந்த ஆச்சரிய முதலை!

மனைவிகள் 6 பேர்; குழந்தைகள் 10 ஆயிரம் பேர்; உலகை கவர்ந்த ஆச்சரிய முதலை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜோகனஸ்பர்க்: உலகின் மிக வயதான முதலை ஹென்றியை பற்றிய தகவல்கள் சுவாரஸ்யம் அளிப்பதாக உள்ளன.

உயிரினம்

இந்த உலகில் பல உயிரினங்கள் வாழ்ந்தாலும் பழமையான உயிரினமாக கருதப்படுவது முதலை. அப்படிப்பட்ட ஒரு முதலைக்கு தற்போது வயது 123 ஆகிறது. அதன் பெயர் ஹென்றி. உலகின் மிக வயதான முதலையாக ஹென்றி அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. இதன் நீளம் மட்டும் 5 மீட்டர், எடை ஒரு டன் ஆகும்.

10,000 குழந்தைகள்

கிட்டத்தட்ட 1000 கிலோ எடையுடன் 16 அடி உயரம் கொண்டது. 6 மனைவிகள், 10,000க்கும் மேற்பட்ட குட்டி முதலைகளை ஈன்று சாதனை படைத்துள்ளது. மனிதனை உண்ணும் நைல் இனத்தைச் சேர்ந்தது ஹென்றி முதலை.

மனித வேட்டை

ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் 1900ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி பிறந்த ஹென்றியின் பெயர்க்காரணம் ஒரு சூப்பர் சுவாரசியம் என்றே சொல்லலாம். 1900களில் போட்ஸ்வானா பழங்குடியினர் பகுதியில் மனித வேட்டையாடிய இந்த முதலையை பிடிக்க ஊர்மக்கள் முடிவு செய்தனர். அதற்காக அவர்கள் உள்ளூர் வேட்டைக்காரர் சர் ஹென்றி நியூமன் என்பவரை அணுகி உதவி கேட்டனர்.

பெயர் வந்தது எப்படி?

ஹென்றியும் மனித வேட்டையாடும் முதலை ஹென்றியை கொல்லாமல் சிறைபிடித்தார். அவரின் பெயரையே பின்னர் முதலைக்கு சூட்டப்பட்டது. அன்று முதல் இன்று வரை மனிதனின் பராமரிப்பில் தான் உள்ளார் முதலை ஹென்றி. தற்போது தென்னாப்பிரிக்காவின் ஸ்காட்பர்க்கில் உள்ள முதலைகள் பாதுகாப்பு மையத்தில் பத்திரமாக உள்ளார் இந்த முதலையார்...!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

kulandai kannan
செப் 04, 2024 22:50

விஞ்ஞான முதலை.


Kumar
செப் 04, 2024 10:37

அதாவது வடிவேலு பாணியில் சொல்லனும்னா, காப்பாத்தவும் செய்யிறோம்,.... நல்ல வாழவுடா.


JeevaKiran
செப் 04, 2024 10:05

1900 களிலேயே மனிதனை வேட்டை ஆடி இருக்கிறது இந்த முதலை. அப்படியென்றால் அப்பவே இதுக்கு 10 வயதுக்கு மேல் இருந்திருக்கும். ஆகா இப்ப இந்த முதலயாரின் வயது 135. சைரிதானே?


ديفيد رافائيل
செப் 04, 2024 09:16

அதோட கெட்ட நேரம் கூண்டுக்குள் அடைபட்டு இருக்கு சுதந்திரமா திரிய வேண்டியது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை