உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிரேசிலில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து; பலி எண்ணிக்கை 12ஆக உயர்வு

பிரேசிலில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து; பலி எண்ணிக்கை 12ஆக உயர்வு

ரியோ டிஜெனிரோ: பிரேசிலிலில் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது. பிரேசிலின் வடகிழக்கு பகுதியில் உள்ள டோகன்டின் ஆற்றில் மீது உள்ள மேம்பாலம், கடந்த டிச.,22ம் தேதி திடீரென இடிந்து விழுந்தது. அப்போது, அந்த மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த, 3 லாரிகள் உள்பட 10 வாகனங்கள் ஆற்றில் விழுந்தன. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விபத்தில் சிக்கியவர்களை, ஆற்றில் இருந்து மீட்கும் பணியில் கடற்படையினருடன் உதவியுடன் போலீசார் ஈடுபட்டனர். இதுவரையில் 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 2 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பலி எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது. மேலும் காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. கெமிக்கல் லாரி ஆற்றில் விழுந்ததால், தண்ணீரில் ஏதேனும் கெமிக்கல் கலந்தது விட்டதா? என்று அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். ஆனால், தேசிய தண்ணீர் ஏஜென்சி அப்படி ஏதும் நடக்கவில்லை என்று கூறியுள்ளது. இந்த விபத்து குறித்து தேசிய போக்குவரத்து உள்கட்டமைப்புக்கான இயக்குநரகம் விசாரணை நடத்தி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை