உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரூ.9.27 லட்சம் கோடி அனுப்பிய வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்

ரூ.9.27 லட்சம் கோடி அனுப்பிய வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க் : வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், 2022ம் ஆண்டில், உலகிலேயே மிகவும் அதிகமாக சொந்த நாட்டுக்கு பணத்தை அனுப்பி வைத்துள்ளது புள்ளி விபரங்களில் தெரியவந்துள்ளது. மொத்தம், 9.27 லட்சம் கோடி ரூபாய் அனுப்பி இந்த சாதனையை வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் படைத்துள்ளனர்.சர்வதேச புலம்பெயர்ந்தோர் சங்கம், 2000ம் ஆண்டில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அறிக்கையை வெளியிட்டு வருகிறது. இதன்படி, 2022ம் ஆண்டுக்கான உலக புலம்பெயர்ந்தோர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.இந்த அறிக்கையின்படி, வெளிநாடுகளில் உள்ளவர்கள், தங்களுடைய சொந்த நாட்டுக்கு பணம் அனுப்புவதில், 100 பில்லியன் டாலர், அதாவது 10,000 கோடி டாலருக்கு அதிகமாக அனுப்பிய சாதனையை இந்தியா படைத்துள்ளது.இந்தியர்கள், 2022ம் ஆண்டில், 11,000 கோடி டாலர், அதாவது, 9.27 லட்சம் கோடி ரூபாயை இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.இந்தப் பட்டியலில் மெக்சிகோ, சீனா, பிலிப்பைன்ஸ், பிரான்ஸ் ஆகியவை அடுத்த நிலைகளில் உள்ளன.அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:உலகின் பல்வேறு நாடுகளில், 1.8 கோடி இந்தியர்கள் உள்ளனர். இது ஒட்டுமொத்த மக்கள் தொகையில், 1.3 சதவீதமாகும். அதுபோல, புலம்பெயர்ந்தவர்களில் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா, சவுதி அரேபியாவில் உள்ளனர்.பல்வேறு கடினமான சூழ்நிலைகள், கடன் நெருக்கடிகள், பயணச் செலவு அதிகரிப்பு, குடும்பத்தை விட்டு பிரிந்திருக்கும் ஏக்கம், கடுமையான பணிகள், பதற்றமான சூழ்நிலை, முறையான உணவு, துாக்கமின்மை போன்றவை இருப்பினும், வெளிநாடுகளில் பணியாற்றுவோர், தங்களுடைய குடும்பத்துக்கு பணத்தை அனுப்பி வைக்கின்றனர்.அந்த வகையில், முதல் முறையாக, 10,000 கோடி டாலருக்கு அதிகமான தொகையை அனுப்பி, அதிக பணம் அனுப்பிய நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.கடந்த, 2010, 2015 மற்றும் 2020ம் ஆண்டுகளிலும் இந்தப் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருந்தது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

J.V. Iyer
மே 09, 2024 04:09

தப்பித்தவறி நமக்கு ஒரு டாலர்கூட அனுப்ப மாட்டாய்ங்களே சீச்ச்சீ இந்த பழம் புளிக்கும்


vaiko
மே 09, 2024 01:56

அவர்கள் உழைத்து சம்பாதித்து அனுப்பும் பணத்தை வைத்து வீணாக ஆயுதங்கள் வாங்கி செலவழிக்கின்றோம்


ஆரூர் ரங்
மே 09, 2024 08:14

அது அரசின் வருமானமல்ல. அதற்கு வருமானவரி கூட கிடையாது. ஒன்று அவர்கள் குடும்பத்தால் செலவழிக்கப்படும் அல்லது டெபாஸிட்டாக வங்கியில் போடுவர்.


தாமரை மலர்கிறது
மே 08, 2024 23:44

வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்குள் அனுப்பப்படும் பணத்திற்கு பத்து சதவீதம் வரி போட்டால், அரசின் வருமானம் கூடும்


chails ahamad
மே 09, 2024 14:18

வாயில் வந்ததை பேசுவதில் , எழுதுவதில் என்ன சுகம் கண்டீரோ , நமது நாட்டில் வேலை வாய்ப்புகளின்றி , வெளிநாட்டில் வெயிலிலும் , மழையிலும் , குளிரிலும் , கஷ்டப்பட்டு , உண்ணாமல் , உறங்காமல் கஷ்டப்பட்டு சம்பாதித்து அனுப்பும் பணத்திற்கும் வரி போட சொல்லும் தங்களை போன்ற அதிபுத்திசாலிகளை எண்ணி வியந்தேன்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை