உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் போர் நிறுத்தம்: மத்தியஸ்தம் செய்த கத்தார் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் போர் நிறுத்தம்: மத்தியஸ்தம் செய்த கத்தார் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தோஹா: ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன என பேச்சுவார்த்தைக்கு பின்னர் கத்தார் அறிவித்து உள்ளது.கடந்த ஒரு வாரமாக, பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே நடந்து வரும் இந்த மோதல்களில், இரு தரப்பிலும் பலர் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே இரு நாடுகள் இடையே ஒப்புக்கொள்ளப்பட்ட போர் நிறுத்தத்தை மீறி, ஆப்கானிஸ்தானில் 3 இடங்களில் குண்டுவீசி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. பாக்டிகா மாகாணத்தின் அர்குன் மற்றும் பர்மல் மாவட்டங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இரு நாடுகளும் அமைதிப் பேச்சு நடத்த முன்வர வேண்டும் என கத்தார் அழைப்பு விடுத்து இருந்தது. பின்னர், எல்லை வன்முறையை நிறுத்துதல் மற்றும் எல்லையில் நீண்டகால ஸ்திரத்தன்மையை உறுதி செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, கத்தார் மற்றும் துருக்கியின் மத்தியஸ்தத்தில் தோஹா பேச்சு நடந்தது. ஆப்கன், பாகிஸ்தான், துருக்கி மற்றும் கத்தார் நாடுகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.இதில், பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக கத்தார் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

naranam
அக் 19, 2025 08:29

கத்தார் மற்றும் துருக்கியின் வாலை இந்தியா ஒட்ட நறுக்க வேண்டும்..


VENKATASUBRAMANIAN
அக் 19, 2025 07:20

கத்தார் ஏன் பாகிஸ்தானை கண்டிக்க வில்லை


நிக்கோல்தாம்சன்
அக் 19, 2025 07:14

மீண்டும் மீண்டும் ஆப்கானை சீண்டும் பாகிஸ்தான் , ஏனென்று கேட்க ஆளில்லை போல


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை