உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான்!

ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக ரஷ்யா மற்றும் சீனா தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.கடந்த ஏப்., 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தானுடனான அனைத்து தொடர்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pjlorvoo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.இந்த நிலையில், பஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணையில் ரஷ்யா மற்றும் சீனா தலையிட வேண்டும் என்று பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது; பஹல்காம் தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் முன்மொழிந்துள்ளார். இந்தியா சொல்வது குறித்து அறிய ரஷ்யா மற்றும் சீனா அல்லது வேறு ஏதேனும் மேற்கத்திய நாடுகள் ஒரு குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும்.பஹல்காம் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். இந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பிருப்பதற்கான ஆதாரங்களை காட்ட வேண்டும், இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இந்த விவகாரத்தில் இருந்து தப்பிக்க, பல்வேறு நாடகங்களை பாகிஸ்தான் அரசு அரங்கேற்றி வருகிறது. அதில் ஒன்றாக, சர்வதேச விசாரணை வேண்டும் என்று இப்போது கூறத் தொடங்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

நிக்கோல்தாம்சன்
ஏப் 28, 2025 21:26

இன்னமும் மார்ஸ் , புளூட்டோ , saturn என்று எல்லாத்தையும் இழுத்து விடுங்க , பிளவில் புட்டோ சொன்னது மறந்தே போகுது , மூனீர் பன்றி எங்கே போனான் ?


Ramesh Sargam
ஏப் 28, 2025 20:25

ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான் அந்த அளவுக்கு பாகிஸ்தானுக்கு பயம் வந்துவிட்டது. பாகிஸ்தானுக்கு இந்தியா ஒரு பெரிய சம்பவம் செய்யப்போகிறது. பொறுத்திருந்து கண்டுகளிக்கலாம்.


Sankar Ramu
ஏப் 28, 2025 17:13

எப்ப இந்த சீமான் பற்றிய இந்த பொண்ணு வீடியோவ எடுப்பிங்க. நியூஸ் படிக்க முடியில.


ராமகிருஷ்ணன்
ஏப் 28, 2025 16:59

மோடிஜீயை பற்றி நன்கு அறிந்த ரஷ்யா நிச்சயம் தலையிடாது. சீனா நேரடியாக உதவ முன்வராது..


Mr Krish Tamilnadu
ஏப் 28, 2025 16:57

பொருளாதார தடை போல், நமது தடையை ஏற்க முடியாமல் உலக நாடுகளை துணைக்கு அழைக்கிறது. அணு ஆயுதம் பயன்படுத்துவோம் என்றது. என்ன? உலக உளவு அமைப்புகள் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்குமா, என்ன?. அடுத்து வான்வெளி, அந்நிய விமானங்கள் அந்த வான்வெளியை பயன்படுத்தும் என்றனா?. அங்கு இருந்து வரும் விமானங்களை நாம் அனுமதிக்க வில்லை என்றால், இந்திய பயணிகளின் பாதுகாப்பிற்காக அனைத்தும் சுற்றி தான் போகும். உலக குழு விசாரணை, சரி அனைத்து காஷ்மீர் தாக்குதலுக்கும் செய்வோமா?. என்ன செய்வது என தடுமாறுகிறது?.நாம் மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நீர் அவர்களுக்கு தேவையெனில், அமைதி காத்து நாம் இழுத்த இழுப்பு வந்து தான் ஆக வேண்டும். நாம் தற்காலிக நிறுத்தம் தொடர்வதும், இருப்பதும் அவர்கள் நடவடிக்கையை பொறுத்தது என கொக்கி போட்டு வைக்க வேண்டும். இழப்புக்கான அடி,யை எப்படி வாங்கி கொள்கிறோம் என்பது அவர்கள் நடவடிக்கையே சொல்லி விடும்.


lana
ஏப் 28, 2025 16:49

இதுக்கு எதுக்கு சீனா. எங்க ஊரு ஊசி போன குருமா மற்றும் உண்டி குலுக்கி மற்றும் ஓட்டு பொருக்கி திராவிட குரூப் மற்றும் பப்பு இவர்கள் ஐ கூப்பிட்டால் போதும். அவர்கள் ஏ உங்கள் சார்பாக வாதாடி விடுவார்கள். அந்த ஒட்டு அது மட்டும் மறுக்காமல் போட சொல்லிட்டு போங்க போதும்


ponssasi
ஏப் 28, 2025 16:19

மதவெறியான சமூகம் உங்களுடையது. ஒரு மதவெறியனை இங்கிருந்து பாகிஸ்தான் கொண்டுசென்று அவனுக்கு பயிற்சியளித்து மூளைச்சலவை செய்து இந்தியா அனுப்பி ஹிந்து மக்களை மட்டும் கொள்ள வந்தவன் என்ன பாகிஸ்தான் விசிட்டிங் கார்டு கூடவா வருவான். திட்டமிட்டு அவனை ஒரு இந்து கட்சி உறுப்பினராகி நடத்தப்பட்ட நாடகம் இது. எங்கு சென்று தேடினாலும் ஆதாரம் கிடைக்காது. இந்தியாவும் ஆதாரமில்லாமல் சம்பவம் செய்யவேண்டும். பலுசிஸ்தான் தனிநாடாக வேண்டும், ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணையவேண்டும் அப்போதுதான் இவர்கள் கொட்டம் அடங்கும்


Murthy
ஏப் 28, 2025 14:40

இன்னமும் அரசு முழு விசாரணை அறிக்கையை வெளியிடவில்லை....... பத்திரிக்கைகள்தான் உருட்டிக்கிட்டு இருக்கின்றன.


Shankar
ஏப் 28, 2025 14:36

எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைக்கு வந்துவிட்டது பாகிஸ்தான். அதுக்குதான் சும்மா இருக்குறவனை பஞ்சாயத்து பண்ண கூப்பிட்டுக்கொண்டிருக்கிறான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை