உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமைச்சரவையினை கலைத்தார் மாலாவி அதிபர்

அமைச்சரவையினை கலைத்தார் மாலாவி அதிபர்

லியோங்வே: மாலாவி நாட்டின் அமைச்சரவையை அந்நாட்டு அதிபர் நேற்று கலைத்தார். எதிர்கட்சியினர் மற்றும் அரசு சாரா அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. தென்கிழக்கு ஆப்ரிக்க நாடான மாலாவி நாட்டில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் பிங்கூவாமுத்தாரிகா (77) அதிபராக உள்ளார். இவரது ஆட்சியில் வெளியுறவு கொள்கையில் சீர்கேடு, மற்றும் சாதாரண பொதுமக்களின் வாழ்க்கை தரம் மற்றும் வாங்கும் சக்தி குறைந்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த ஜூலை மாதம் 19-ம் தேதியன்று மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதனால் ராணுவம் நடத்திய தாக்குதலில் 19 பேர் பலியாயினர். இந்நிலையில் நிர்வாகம் சீர்திருத்தம் கோரி, அந்நாட்டின் பல்வேறு அரசுசாரா அமைப்புகள், கிளர்ச்சியாளர்களி்ன் பிரதிநிதிகள் அதிபர் பிங்கூவாமுத்தாரிகாவை சந்தித்து , தேவைக்கு அதிகமாக உள்ள மந்திரிகளை நீக்கிவிட்டு , குறைந்த எண்ணிக்கையிலான அமைச்சரவையினை உருவாக்கும்படி கோரினர். இதற்கு அதிபர் மறுக்கவே தெடர்ந்து பல கட்ட போராட்டங்கள் நடந்தன. இந்நிலையில், நேற்று அரசு ரேடியோ வாயிலாக அதிபர் பேசுகையில், அமைச்சரவையினை கலைத்துவிட்டதாகவும், இது தொடர்பாக ஐ.நா. குழுவினர் மத்தியஸ்தர்களாக இருந்து பேச்சுவார்த்த சம்மதித்திருப்பதாகவும் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ