மேலும் செய்திகள்
ரஷ்யாவின் அடுத்த இலக்கு என்ன? நட்பு நாடுகளை உஷார்படுத்தும் நேட்டோ
5 hour(s) ago | 10
பாக்., மாஜி உளவுத்துறை தலைவருக்கு 14 ஆண்டு சிறை
8 hour(s) ago
பல்கேரியாவில் மீண்டும் வெடித்தது மக்கள் போராட்டம்
8 hour(s) ago | 1
தோஹா: ஐக்கிய அரபி எமிரேட்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு கத்தார் நாட்டுக்கு பிரதமர் மோடி சென்றார். பிரதமர் மோடி, கத்தார் பிரதமர் எமிர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியை சந்தித்தார். முன்னதாக பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்திய கடற்படை வீரர்கள், விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு கத்தார் நாட்டுக்கு நேற்று மாலை பிரதமர் மோடி சென்றார். இன்று(பிப்.,15) தோஹாவில் கத்தார் பிரதமர் எமிர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். முன்னதாக பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, நிதி உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். கத்தார் பயணம் குறித்து பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தில், ''இந்தியாவும் கத்தாரும் வரலாற்று ரீதியாக நெருங்கிய உறவை கொண்டுள்ளன என பதிவிட்டுள்ளார்.
5 hour(s) ago | 10
8 hour(s) ago
8 hour(s) ago | 1