உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தேவைப்பட்டால் உக்ரைன் அதிபருடன் புடின் பேசுவார்: ரஷ்யா அரசு அறிவிப்பு

தேவைப்பட்டால் உக்ரைன் அதிபருடன் புடின் பேசுவார்: ரஷ்யா அரசு அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: தேவைப்பட்டால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பேச்சு நடத்துவார் என்று ரஷ்ய அதிபர் மாளிகை வட்டாரம் தெரிவித்துள்ளது.உக்ரைனில் 2 ஆண்டுக்கும் மேலாக நீடிக்கும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் உயர்மட்ட ராஜதந்திரிகள் சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bqei64lr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உக்ரைன் அதிகாரிகள் யாரும் பங்கேற்கவில்லை; அழைக்கப்படவும் இல்லை.இந்த பேச்சுவார்த்தை குறித்து ரஷ்யா அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் பெஸ்கோவ் கூறியதாவது:தேவைப்பட்டால் ஜெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அதிபர் புடின் தெரிவித்துள்ளார். ஆனால் ஜெலென்ஸ்கியின் சட்டபூர்வமான தன்மை கேள்விக்குள்ளாக்கப்படலாம் என்ற யதார்த்தத்தைக் கருத்தில் கொண்டு ஒப்பந்தங்களின் சட்ட அடிப்படை குறித்து விவாதம் தேவைப்படுகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.ஜெலென்ஸ்கி கூறுகையில், 'நாங்கள் பங்கேற்காத எந்த அமைதி ஒப்பந்தங்களையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.ஒரு இறையாண்மை கொண்ட நாடாக, நாங்கள் இல்லாமல் எந்த ஒப்பந்தங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

காராஷேவ்
பிப் 19, 2025 07:18

நீயா ஓடுறியா? விஷம் வெச்சு கொல்லட்டுமான்னு பேசுவாரு. அவ்வளவுதான்.


Kasimani Baskaran
பிப் 19, 2025 06:16

இதற்க்கு திராவிட மதத்தினர் எதற்க்கு ஒப்பாரி வைக்கிறார்கள் என்றுதான் புரிந்து கொள்ள முடியவில்லை. உள்ளூர் நண்டாக இருந்தவர்கள் இன்று சர்வதேச அளவில்... பேஷ்... பேஷ்...


J.V. Iyer
பிப் 19, 2025 04:38

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ஒரு சின்னப்பையன். ஒன்றும் தெரியாது. பெரியவர்கள் பேசும்போது இவர் குறுக்கே பேசப்படாது..


Oviya Vijay
பிப் 18, 2025 23:54

. இது ஆரம்பத்துலயே பண்ணி இருந்தா லட்சக்கணக்கான ராணுவ வீரர்களோட உசுரு போயிருக்காதுல்ல... உங்க ரெண்டு பேரோட ஈகோனால உசுரு போன அந்த ராணுவ வீரர்களோட குடும்பங்களோட ஆயுசுக்குமான வலிய உங்களால போக்க முடியுமாடா... இதோட பாதிப்பு எத்தனையோ தலைமுறை தாண்டியும் இருக்கப் போகுது... பாவம் அந்த வீரர்களோட மனைவிமார்கள் மற்றும் அவங்க குழந்தைகள்...


ஜெய்ஹிந்த்புரம்
பிப் 18, 2025 23:28

ச்சே.. நோபல் பரிசு தனக்குத் தான் கிடைக்கும்ன்னு ஒருத்தர் உள்ளூரில் ஜால்ராக்களை வைத்து விளம்பரப்படுத்திக்கிட்டு இருந்தாரு.


V வைகுண்டேஸ்வரன்,Chennai
பிப் 19, 2025 07:52

ஆமா ஸ்டிக்கர் ஒட்டுவதில் நம்மள யாரும் அடிச்சிக்கவே முடியாது...ஜெய்ஹிந்த்தபுறம்


ஜெய்ஹிந்த்புரம்
பிப் 18, 2025 23:25

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உக்ரைன் அதிகாரிகள் யாரும் பங்கேற்கவில்லை அழைக்கப்படவும் இல்லை. - இது நம்ம பார்லிமெண்டுலே ... சட்டங்களை நிறைவேற்றுவது போல இருக்கே.


Bye Pass
பிப் 19, 2025 02:40

அமேரிக்கா பைடன் ராஷ்டிரபதியாக இருந்தவரை உக்ரேனுக்கு ஆயுதங்கள் கொடுத்து சண்டை தொடர உதவி செய்தது ..ட்ரம்ப் ராணுவ உதவியாய் நிறுத்தி சமாதானத்துக்கு வழி செய்கிறார். ஐரோப்பிய நாடுகளில் பணவசதி இல்லை ..உக்ரேன் தகுந்த இழப்பீடு கேட்டு அமெரிக்காவிடமும் ரஷ்யாவிடமும் கோரிக்கை விடலாம் ..


karupanasamy
பிப் 19, 2025 04:03

ஏன் திமுக தலைவர் தேர்தல் நினைவுக்கு வர மறுக்குதா?


Ramesh Sargam
பிப் 18, 2025 21:56

இரண்டு ஆண்டுக்கும் மேலாக போர் நடந்துகொண்டிருக்கிறது. பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் மடிகிறார்கள். பலர் வீடுகளை இழந்து, சொந்தபந்தங்களை இழந்து, எந்தவித வாழ்வாதாரமும் இல்லாமல் தவிக்கின்றனர். இன்னும் என்ன தேவைப்பட்டால் பேச்சு. நீங்கள் இருவரும் பலத்த பாதுகாப்புடன் உங்கள் மாளிகையில் இருக்கிறீர்கள். மடிந்து சாவும் மக்களை பற்றி யோசித்தீர்களா? நீங்கள் எல்லாம் மனித ஜென்மங்களா அல்ல மிருகங்களா? மிருகங்கள் கூட பசி எடுத்தால் மட்டுமே வேட்டையாடும். பிறகு அமைதியாகிவிடும். நீங்கள் மிருகங்களைவிட மிக மிக கொடூரமானவர்கள்.


ஜெய்ஹிந்த்புரம்
பிப் 18, 2025 23:26

அம்புட்டு நல்லவனா நீயி. மணிப்பூர் பத்தி ஒரு ரெண்டு வரி,


Gopalakrishnan Balasubramanian
பிப் 18, 2025 21:50

ஜெலீன்ஸ்கீ, பக்கத்து வீட்டு யூனுஸ் எல்லா கதையும் கடைசி அத்தியாயம் ஆரம்பம் ஆயாச்சு டோய்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை