உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தப்பான ஆங்கிலத்தில் தடாலடி கேள்விகள்; இங்கிலாந்து கேப்டனை திணறடித்த பாக்., பத்திரிகையாளர்

தப்பான ஆங்கிலத்தில் தடாலடி கேள்விகள்; இங்கிலாந்து கேப்டனை திணறடித்த பாக்., பத்திரிகையாளர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராவல்பிண்டி: பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஆங்கிலத்தில் தட்டுத் தடுமாறி கேள்வி கேட்டதால், இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பதில் சொல்ல முடியாமல் திணறினார். இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு போட்டிகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் தொடரில் சமநிலை வகிக்கின்றன. இந்த நிலையில், தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் போட்டியான, பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில், முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, 267 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக, ஜேமி ஸ்மித் 89 ரன்னும், டக்கெட் 52 ரன்னும் எடுத்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் சஜித் கான் 6 விக்கெட்டும், நூமன் அலி 3 விக்கெட்டும், மஹ்முத் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். தொடர்ந்து பேட் செய்த பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 73 ரன் எடுத்திருந்தது. பின்னர், இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாகிஸ்தானைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர், தப்பு தப்பாக ஆங்கிலத்தில் தட்டுத் தடுமாறி கேள்வி எழுப்பினார். கேள்வி புரியாமல் தவித்த ஸ்டோக்ஸ், இருமுறை கேள்வியை திரும்பக் கேட்குமாறு கூறினார். கடைசியாக, 3வது முறையாக பத்திரிகையாளர் மீண்டும் தடுமாற, பென் ஸ்டோக்ஸ், அவர் என்ன கேட்க வருகிறார் என்பதை யூகித்து, அதற்கு பதிலளித்துச் சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Suppan
அக் 25, 2024 15:18

பன்னாட்டு நிகழ்ச்சிகளில் எல்லா தலைவர்களும் டெலிபிராம்ப்டரைப் பார்த்துத்தான் பேசுவார்கள். பேச்சில் சிறு தவறு நிகழ்ந்தாலும் நாட்டை பெரிய அளவில் பாதிக்கலாம் .


Senthoora
அக் 25, 2024 14:28

தப்பாக கேட்டாலும், அதுக்கு பொறுமையாக பதில் சொன்னாரே, அவருக்கு இருக்கும் நாகரிகம் அது, இங்கே அதை கேலி செய்கிறவர்கள் நாகரிகம் அப்படி, என்னமோ நம்ம பத்திரிக்காரங்க இங்கிலீஷை கரைத்து குடித்தமாதிரி, அரசியல் தலைவர்களே ஒரு மொழிபெயர்பாளர்களை வைத்திருக்கிறார்கள், அரசு சம்பளம் கொடுத்து.


ரெட்டை வாலு ரெங்குடு
அக் 25, 2024 21:47

பாக்கிஸ்தான் ல அணுகுண்டு தயாரிப்பது தான் சொல்லிக்கொடுப்பார்கள் . இங்கிலீப்பீசு தெரிஞ்ச என்ன தெரியாட்டி என்ன போந்தூரா. ஊதுபத்தி பாய்க்கு தெரியாதா என்ன ?


Kumar Kumzi
அக் 25, 2024 12:48

மூனு வயதிலேயே கொர்ர்ரான மண்டையில ஏத்தி முட்டாள்களாக்கிடுவானுங்களே அப்புறம் எப்படி அறிவு வளரும்


Rasheel
அக் 25, 2024 11:31

பாகிஸ்தானில் சரியான கல்வி முறை இல்லை. மதரசா என்பதும் தீவிரவாத கல்வி முறை உள்ளது. அப்பறம் எப்படி ஆங்கிலம்??


Barakat Ali
அக் 25, 2024 11:30

தமிழக முதல்வர் ஆரியர்களும் வியக்கும் வண்ணம் ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர்.... அல்ரெடி டோல்டட் என்று அவர் கூறியதைக் கேட்டவர்கள் வாயடைத்துப் போயினர் .......


ஆரூர் ரங்
அக் 25, 2024 11:29

ஆங்கில சேனல் நிருபர் நீங்க ரிலீஜியஸா ன்னு சிம்பிளா கேட்டாதுக்கு புரியல ன்னு தமிழ்ல பதிலளித்தார் ஆங்கிலவழியில் படித்த பட்டதாரியான விடியல். அதுவல்லவோ நேர்மை?


RAJ
அக் 25, 2024 11:25

பென் ஸ்டோக்ஸ்க்கு ரெண்டு வார்த்தை வேற மொழி பேச தெரியுமா??? அதனால ..


Kumar Kumzi
அக் 25, 2024 12:52

என்னங்க மூர்க்க காட்டேரிக்கு ஹிந்து பெயரா இருக்கு ஹாஹாஹா குல்லா தெரியுது மறைச்சுக்க


vadivelu
அக் 25, 2024 14:06

எதற்கு தெரியணும்? அவருக்கு தெரிந்த மொழியில் உலகையே சுற்றலாமே.


Ganesun Iyer
அக் 25, 2024 11:02

இது என்ன பிரமாதம், எங்க ஊருல தமிழுக்கு தாங்கத்தான் அதாரிட்டின்னு சொல்லிக்கிட்டே துண்டு சீட்டையே பாத்து தப்பு தப்பா படிக்கிறாங்க. அவிகள ஓட்டு போட்டு ஜெயிக்கவும் வைக்கிறோம்...


Barakat Ali
அக் 25, 2024 11:32

உடனே மோடி டெலிபிராம்ப்டரை பார்த்து பேசுவதை கொத்தடிமைகள் குறிப்பிடுவாங்க .... ஆனா அவர்கள் துண்டுசீட்டைப் பார்த்து படித்தும் தங்களது எஜமானர் உளறுவது பற்றி சிந்திக்க முடியாத அளவுக்கு மூளை மழுங்கடிக்கப்பட்டவர்கள் .....


APS
அக் 25, 2024 10:48

என்ன கேள்வி கேட்டான்னு சொல்லவே இல்லியே


Kannan Chandran
அக் 25, 2024 11:19

வேறென்ன, 26வது IMF Bailout- க்கு ஆதரவு கேட்டுருப்பான்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை