உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சிறந்த மனைவிகள் பட்டியலில் ராணி லக்ஷ்மிபாய்

சிறந்த மனைவிகள் பட்டியலில் ராணி லக்ஷ்மிபாய்

நியூயார்க் : நியூயார்க்கின் டைம்ஸ் பத்திரிக்கை,மிசிலி ஒபாமா மற்றும் சாரா பாலின் ஆகியோரின் கருத்துக்கள் அடங்கிய உலகின் தலைசிறந்த 10 வரலாற்று மனைவிகளின் பட்டியலை வெளியிட்டது. இதில் 1857ம் ஆண்டு நடைபெற்ற ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடிய ஜான்சியின் ராணி லக்ஷ்மிபாய் பெயரும் இடம்பெற்றுள்ளது. கணவரின் வளர்ச்சி, போராட்டம் ஆகியவற்றிற்கு உறுதுணையாக இருந்ததுடன் சமுதாயத்திற்காகவும் பாடுபட்ட மனைவிகளின் பட்டியலில் அமெரிக்க அதிபரின் மனைவி மிசிலி ஒபாமா, அமெரிக்க குடியரசு தலைவர் ஜான் மெக்கைனின் மனைவி சாரா பாலின், எகிப்திய முன்னாள் ராணி கிளியோபாட்ரா, டைகர்வுட்ஸ் முன்னாள் மனைவி எலின் நார்டிகரன், ஸ்பெயின் ராணி இசபெல்லா உள்ளிட்ட உலகின் புகழ்பெற்ற பெண்மணிகளின் பெயர்களும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை