உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சீன உணவகத்தில் தீவிபத்து: 22 பேர் பலி

சீன உணவகத்தில் தீவிபத்து: 22 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஜிங்: சீனாவில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்துள்ளனர்.சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள லியானிங் மாகாணத்தின் லியோயாங் நகரில் உணவகம் ஒன்று உள்ளது. 3 மாடி கொண்ட இந்த கட்டடத்தில் இன்று (ஏப்., 29) மதியம் தீவிபத்து ஏற்பட்டது. இதற்கான காரணம் குறித்து உறுதியான தகவல் இல்லை என்றாலும், காஸ் கசிவால் தீவிபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன. அந்த உணவகத்தின் கதவுகள் மற்றும் ஜன்னல் வழியாக தீப்பிழம்புகள் கிளம்பின. அந்த பகுதி புகை மூட்டமாக காணப்பட்டது.இந்த சம்பவத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங், இந்த விபத்து நமக்கு ஒரு பாடத்தை கற்றுக் கொடுக்கிறது. காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதுடன், தீவிபத்து குறித்து விசாரணை நடத்தி காரணமானவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Bhakt
ஏப் 29, 2025 19:36

இயற்க்கைக்கு எதிராக வினை ஆற்றுபவர்கள். இயற்க்கை தான் இவர்களை அழிக்க வேண்டும்.


Mr Krish Tamilnadu
ஏப் 29, 2025 18:52

22ம் தேதி சம்பவத்தில் தலையீடாதே, உனது நாட்டிலும் கரும்புகை கிளம்பும் என்கிறாத?இயற்கை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை