உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பூனை, நாய்க்கு ரூ.23 கோடி சொத்து: மூதாட்டி தாராளம்

பூனை, நாய்க்கு ரூ.23 கோடி சொத்து: மூதாட்டி தாராளம்

பீஜிங்: சீனாவில் ஷாங்காய்நகரில் வசிப்பவர் மூதாட்டி லியூ. தனக்கு சொந்தமான ரூ.23 கோடி சொத்துகளை 3 பிள்ளைகளுக்கும் பிரித்து கொடுக்கும் வகையில் உயில் எழுதி வைத்தார்.ஆனாலும் அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டபோது பிள்ளைகள் 3 பேரும் ஒரு முறை கூட வந்து பார்க்கவில்லை. இது லியூவுக்கு அதிர்ச்சி, வேதனையை ஏற்படுத்தியது. இதனால் ஆவேசம் அடைந்த அவர் தன் உயிலை மாற்றி எழுதி சொத்துகள் அனைத்தையும் தான் வளர்க்கும் நாய், பூனைகள் மீது எழுதி வைத்துள்ளார்.இதையறிந்த அவரது பிள்ளைகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனால் இதுபோன்ற செயல்களுக்கு அந்நாட்டு சட்டத்தில் இடமில்லை என்பதால், கால்நடை மருத்துவமனையை துவக்கி நாய், பூனையை நன்றாக பராமரிக்கும்படி, விலங்குகள் நல அமைப்பிடம் தொடர்பு கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளன. இதற்கு பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். சீனாவில் வளர்ப்பு பிராணிகள் மீது சொத்து எழுதி வைக்க அந்நாட்டு சட்டத்தில் இடமில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

g.s,rajan
ஜன 29, 2024 22:06

சொத்துக்களை யாராவது ஆட்டையைப் போட்டா அது நாய்க்கும் பூனைக்கும் தெரியுமா...???.


PR Makudeswaran
ஜன 29, 2024 20:36

ஆத்தா பிள்ளைகளை நல்லாத்தான் வளர்த்தது. ஆனால் பிள்ளைகள் பிள்ளைகளாக இல்லை. பாவம் அந்த ஆத்தா வின் தலை விதி.


DVRR
ஜன 29, 2024 16:55

நாய் பூனை வளர்ப்பது போல ஒரு கேவலமான கீழ்த்தரமான எண்ணம் மனித குலத்திற்கு இழுக்கு. இது எதை காட்டுகின்றது???வெறும் நான் என்ற நல்ல அளவில் பணம் உள்ளது என்று வெளியில் காட்டிக்கொள்ளும் அகம்பாவம்??? என்னிடம் இவ்வளவு காசு இருக்கின்றது ஆகவே நான் நாய் பூனை வளர்க்கின்றேன். அதை பார்த்துக்கொள்ள இருவரை வேலைக்கு வைத்த்திருக்கின்றேன் என்று டப்பா அடித்து தான் மிக மிக உயர்ந்தவன் என்று காட்டிக்கொள்ளத்தான் இந்த ஏற்பாடு. அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது . அது ஓகே . நாய் பூனை வளர்ப்பவர்கள் செயல்பாடு நாய் பூனை ஜாதியாக மாறுகின்றது நாய் பூனையின் செயல்பாடு ஒரு மனிதனாக மாறுகின்றது. இது யாருக்கும் ஏன் புரிவதில்லை. உங்களுக்கு துணை என்று ஒருவர் வேண்டும் என்றால் அனாதை குழதைகளி தத்து எடுத்துக்கொண்டு அவர்களை பார்த்துக்கொள்ளுங்கள், ல்ல


Kalyan Singapore
ஜன 29, 2024 15:25

ஆத்தா பூனை வளர்த்துச்சு நாய் வளர்த்துச்சு ஆனா மகன்களை சரியாக வளர்க்கலை


திரு.திருராம்
ஜன 29, 2024 13:16

எப்படியும் நாய் பூனையின் ஆயுள் 15ஆண்டுக்குள்தான்,,,,எனவே எனக்கு அதன் பராமரிப்பாளர் வேலை கொடுக்கமுடியுமா?????(நாய் பூனை ஆயுளுக்கு பின் அது எனக்கு தானே?)


VSaminathan
ஜன 29, 2024 08:37

அதெப்படி? உயில் என்பமே ஒருவரது விருப்ப உணர்வை நிறைவேற்றுவதற்காகத் தானே ஏற்பட்டது-அவர் பிள்ளைகள் அவரது எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லையல்லவா? தவிர மிருகங்களுக்கு பழக மட்டுமே தெரியும் - உயிர் போகும் வரை அவர்களை விட்னு விலகத் தெரியாது - எனவே அந்த பூனை நாய்கள் அவரது மகன் மகளை ஏற்றுக்கொண்டு அவரது வீட்டில் நுழைய விட்டால் அவர்கள் அறுபவிக்கலாம், இல்லையேல் அந்த ணொத்தே மிருகநலன்களுக்காக செலவிடப்பட வேண்டும்.


Senthoora
ஜன 29, 2024 12:20

செல்லபிரயாணிகளின் மேல் சொத்துக்களை உயில் எழுதக்கூடாது என்று சீனா சொலவ்து, சில சமயம் உயில் எழுதப்பட்ட பிரியாணியை யாராவது சமைத்து தின்றுவிட்டு, இப்போ நாங்கதான் உரிமை என்று சொல்வார்களோ என்று பயமாக இருக்கலாம். லொள்ளு.


Ramesh Sargam
ஜன 29, 2024 07:32

முதியவர்கள் ஆன பிறகு அவர்களை அனாதையாக விடும் பிள்ளைகள் கடுமையாக சிறை தண்டனை அனுபவிக்கவேண்டும். அப்படிப்பட்ட பிள்ளைகளுக்கு ஒரு சல்லிக்காசு கூட கொடுக்கக்கூடாது.


Senthoora
ஜன 29, 2024 08:43

உண்மை தான், இந்த மூதாட்டி இறந்தபின்தான் இந்த சொத்து, யாராவது சொல்லமுடியுமா? அம்பாண்ணி, அதானி வீடு செல்லப்பிராணிகள் விலையையும் அதுக்கு ஒரு மாதத்துக்கு எதனை கோடி செலவுசெய்கிறார்கள் என்று, அவர்கள் போகும்போது அந்த பிராணிகளுக்கு எதை எழுதுவார்கள் என்று.


Ahmed
ஜன 29, 2024 09:22

Appreciate this Chinese Gradma.Chinese are Most Loved to Eat the Dog and Cat Meets.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை