உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரஷ்யா- உக்ரைன் அமைதி ஒப்பந்தம்: ஜெலன்ஸ்கி சந்திப்புக்கு பிறகு டிரம்ப் முக்கிய தகவல்

ரஷ்யா- உக்ரைன் அமைதி ஒப்பந்தம்: ஜெலன்ஸ்கி சந்திப்புக்கு பிறகு டிரம்ப் முக்கிய தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ரஷ்யா- உக்ரைன் அமைதி ஒப்பந்தத்திற்கு எப்போது இல்லாத அளவுக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. 20 அம்ச அமைதி திட்டத்தில் 90 சதவீதம் ஜெலன்ஸ்கி சம்மதித்துள்ளார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையிலான நான்கு ஆண்டுகால மோதலை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. அமைதி ஒப்பந்தம் குறித்து, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, புளோரிடாவில் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில் உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்தம் தொடர்பாக பேசப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூட்டாக நிருபர்களை சந்தித்துப் பேசினர். அப்போது ஜெலன்ஸ்கி பேசியதாவது: ஜெலன்ஸ்கி உடன் சந்திப்பு அற்புதமானது. அவருடன் நிறைய விவாதித்தேன். அமைதி ஒப்பந்தத்திற்கு எப்போது இல்லாத அளவுக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. 20 அம்ச அமைதி திட்டத்தில் 90 சதவீதம் ஜெலன்ஸ்கி சம்மதித்துள்ளார்.இரண்டாம் உலக போருக்கு பிறகு, மிக கொடிய போரை முடிவுக்கு கொண்டுவருவதில் அவர்கள் நிறைய முன்னேற்றம் அடைந்துள்ளனர். அவர்கள் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும். ஏராளமான மக்கள் உயிரிழந்துவிட்டனர். தற்போது இரு அதிபர்களும் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார்கள். நான் அதிபர் புடினுக்கும் மீண்டும் அழைப்பு விடுக்கப் போகிறேன், நாங்கள் பேச்சுவார்த்தைகளைத் தொடர்வோம். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

அமைதிக்கு தயார்

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியதாவது: நாங்கள் சிறந்த கலந்துரையாடலை நடத்தினோம், மேலும் இந்தச் சமீபத்திய வாரங்களில் அமெரிக்க மற்றும் உக்ரைன் குழுக்கள் பேச்சுவார்த்தை வாயிலாக அடைந்த முன்னேற்றத்தை நாங்கள் பாராட்டுகிறோம்.அமெரிக்கா-உக்ரைன் பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்து 100 சதவீதம் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. நிலையான அமைதியை அடைவதில் பாதுகாப்பு உத்தரவாதங்கள் ஒரு முக்கிய மைல்கல் என்பதை நாங்கள் ஒப்புக்கொண்டோம், உக்ரைன் அமைதிக்குத் தயாராக உள்ளது. இவ்வாறு ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ponssasi
டிச 29, 2025 17:23

ரஷியாவின் ஒருபகுதி நிலப்பரப்பில் இருந்துகொண்டு ரஷியாவின் பரம எதிரியை அழைத்து விருந்து வைத்தால் இந்த நிலைதான் ஏற்படும். இருப்பது உண்பது எல்லாம் ரஷியாவிடம். விசுவாசம் மட்டும் நெட்டோ அமைப்புடன் என்னசார் உங்க நியாயம்.


RAJ
டிச 29, 2025 08:36

ஒத்துக்காத ஜெலன்ஸ்கி.. ஒரு கை இருக்கா? பாத்துரலாம். இன்னும் கொஞ்ச மக்கள் உக்ரைன்ல உயிரோட நடமாடுராங்க. சொல்லிப்புட்டேன்.. அம்புட்டுதேன்... அப்பரும் நம்ப அய்யாவுக்கு சூடா ஒரு நோ..பல் பார்சலுங்கோ ....பயபுள்ள வச்சு வாழட்டும்.. வயசான காலத்துல.. ..அந்நியத்துக்கு ஆசைப்படுது ...


N.Purushothaman
டிச 29, 2025 08:10

உக்ரைனில் நிலைமை மிக மோசமாக உள்ளது ....கிட்டத்தட்ட நாற்பது சதவிகித நிலப்பரப்புக்களை ரஷியா கைப்பற்றிவிட்டது ...கடந்த சில நாட்களாக உக்ரைன் தலைநகரை குறிவைத்து ரஷியா அதிரடியாக ட்ரொன், ஏவுகணை தாக்குதலை போன்றவற்றை அதிகபடுத்தி உள்ளது ....உக்ரைன் மக்கள் தற்போது மிகவும் கோபத்தின் உச்சக்கட்டத்தில் உள்ளனர் ...குடிநீர் மற்றும் மின்சாரம் தடை செய்யப்பட்டு உள்ளது ...இதனிடையே அங்கு ஆயுத கொள் முதலில் வரலாறு காணாத அளவிற்கு ஊழல் வேறு நடந்து உள்ளது ....


மேலும் செய்திகள்







புதிய வீடியோ