உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஐநா சபையில் சீர்திருத்தம்: பிரிக்ஸ் கூட்டத்தில் ஜெய்சங்கர் வலியுறுத்தல்

ஐநா சபையில் சீர்திருத்தம்: பிரிக்ஸ் கூட்டத்தில் ஜெய்சங்கர் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ஐநா சபையில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டியது அவசியம் என்று நியூயார்க்கில் நடந்த பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐநா பொதுச்சபை கூட்டத் தொடர் நடந்து வருகிறது. பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று உரை நிகழ்த்தி வருகின்றனர். இதில் கலந்துகொள்ள சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது: உலகத்தில் பல்வேறு மோதல் நிலவி வரும் நிலையில் அமைதியை உருவாக்க பிரிக்ஸ் அமைப்பு முக்கியமான ஒன்றாக மாற வேண்டும். ஐநா. பாதுகாப்பு கவுன்சிலில் விரிவான சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும். அதிக வரி விதிப்பு உட்பட வர்த்த மோதல் நிலவி வரும் நிலையில், வர்த்தக அமைப்பைப் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு ஜெய்சங்கர் கூறியுள்ளார்.இதே போல, பிரிக்ஸ் அமைப்பில் இடம் பெற்றுள்ள இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தையும் ஜெய்சங்கர் தனியாக நடத்தினார். பிரிக்ஸ் கூட்டமைப்பு மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் வெறுப்பை கொட்டி வரும் நிலையில் அமெரிக்காவிலேயே இத்தகைய கூட்டத்தை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

KOVAIKARAN
செப் 27, 2025 08:51

BRICS நாடுகள் ஒற்றுமையுடன் செயல்பட்டு, அவர்களுக்குள், ஒரு வர்த்தக ஒப்பந்தம், அவர்களுக்கென்று ஒரு currency - ஐரோப்பிய நாடுகளின் Euro போல - ஒன்றைக் கொண்டுவர வேன்டும். இந்த BRICS நாடுகளில், பிரேசில் ஒன்றுதான் தென் அமெரிக்காவில் USA அருகில் உள்ளது. அந்த இரு நாடுகளுக்குள் வர்த்தகங்கள் நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றன. பிரேசிலில் விளையும் விவசாய பொருட்கள், அமெரிக்காவிற்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்கிறது.


kamal 00
செப் 27, 2025 08:19

சும்மாவா ஜெய்சங்கர் எப்போதும் மாஸ் தான்


jyo
செப் 27, 2025 08:16

என்னங்க சீர்திருத்தம் ஐநாவில் எஸ்கலேட்டர் வேலை செய்யவில்லை பிராஃப்ட்வேர் வேலை செய்யாமல் போய்விட்டது அரங்கத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கு ஒளி ஏதும் கேட்பதில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை