உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சவுதியில் சட்டம் கடுமையா இருக்குதுப்பா! ஒரே ஆண்டில் 101 பேருக்கு மரணத்தண்டனை

சவுதியில் சட்டம் கடுமையா இருக்குதுப்பா! ஒரே ஆண்டில் 101 பேருக்கு மரணத்தண்டனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ரியாத்: சவுதி அரேபியாவில் கடுமையான சட்டத்தால் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஒரே ஆண்டில் 101 பேருக்கு மரணத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டவர்கள் சென்று பணம் சம்பாதிப்பதில் சவுதியை தான் பலரும் தேர்வு செய்கின்றனர். இந்தியர்களும் அதிகம் செல்லும் நாடாக சவுதி உள்ளது. இங்கு இஸ்லாமிய சட்டங்கள் மிக கடுமையானதாக உள்ளது. குற்றம் புரிந்தவர்களுக்கு குற்றம் நடந்த இடத்தில் கடும் தண்டனை விரைவில் வழங்கப்படுவது வழக்கம். இந்த 2024ல் 101 பேருக்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. போதை மருந்து கடத்தல் ஈடுபட்டவர்களே அதிகம் ஆவர். 2022, 2023 ஆண்டுகளை ஒப்பிடுகையில் இது போன்ற தண்டனை பெறுபவர்கள் இந்த ஆண்டு 3 மடங்கு அதிகரித்துள்ளது.

பாகிஸ்தான் காரர்களே அதிகம்

இந்த ஆண்டு தண்டனை பெற்றவர்களில் பாகிஸ்தானியர்களே அதிகம் அடங்குவர். தண்டனை பெற்ற நாட்டவர்கள் விவரம் வருமாறு: பாகிஸ்தான் - 21 பேர், ஏமன் நாட்டவர்கள்; 20 பேர், சிரியா- 14 பேர், நைஜீரியா- 10 பேர், எகிப்து- 9 பேர் , ஜோர்டன், எத்தியோப்பியா தலா 8 பேர், இந்தியா, ஆப்கானிஸ்தான், சூடான் நாட்டவர்கள் தலா 3 பேர் என 101 பேர் மரணத்தண்டனை பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

தாமரை மலர்கிறது
நவ 21, 2024 20:00

வெரி குட்


Indian
நவ 21, 2024 18:42

இந்தியாவிலும் குற்றங்கள் குறையவேண்டுமென்றால், சவுதி போல சட்டங்கள் கடுமையாக இருக்கவேண்டும். இல்லாததால்தான் இந்தியாவில் என்றைக்கும் இல்லாத அளவுக்கு அதிக குற்றங்கள் நடக்கின்றன. கொலை, பெண்கள் பாலியல் துன்புறுத்தல், சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல் இப்படி குற்றங்கள் பட்டியல் நீளும். பட்டியல் குறையவேன்றுமென்றால் நாமும் சவுதி சட்டங்களை இங்கே கொண்டுவரவேண்டும்.


என்றும் இந்தியன்
நவ 21, 2024 16:58

மிக எளிதான சட்டம் "தவறு கண்டேன் சுட்டேன், சொத்து அரசு கருவூலத்திற்கு மாற்றம், ரத்த உறவு சொந்தங்கள் இந்திய குடியுரிமை நீக்கப்பட்ட்து" ஒரு மாதத்தில் இந்தியா அமைதியான நாடாக மாறிவிடும்.


prabhu
நவ 21, 2024 16:42

நான் 8 வருடம் Jeddah ல தான் இருந்தேன் ஒரு ப்ரோப்லேம் இல்லை இன்னும் சொல்ல போனால் safe கொண்ட்ரி கூட, தப்பு செய்தவன் தண்டனை அனுபவிக்கனும்


ديفيد رافائيل
நவ 21, 2024 14:18

இந்தியாவில் தப்பு பண்ணி தப்பிக்கின்றனர்


SIVAN
நவ 21, 2024 13:57

செஸ் பிளேயர், எத்தனை வருடம் நீங்கள் சவூதி அரேபியாவில் வாழ்ந்தீர்கள். இங்கு முதலில் சவூதி பிரஜைகள் மதம் பார்த்து பழகுவார்கள் அல்ல. இங்கு குழந்தை பிறந்தால் எனா மதமோ அதை குறிப்பிவிடுவார்கள். ரெசிடென்ஸ் பெர்மிட் ல் என்ன மதம் என்று இருக்கும். வீட்டில் நம் வழியில் பிரார்த்தனை செய்யலாம். எல்லா தமிழ் பண்டிகையும் கொண்டாட படுகிறது. இந்தியர்களுக்கு நல்ல மரியாதை யிருக்கிறது. நிறைய ப்ராஜெக்ட் நடக்கிறது. அபாயா மற்றும் ஹிஜாப் கட்டாயம் இல்லை. சவுதியில் ஹிந்து பூஜை முறைக்கு தேவையான எல்லா பொருளும் கிடைக்கிறது. சவுதியில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை கடை பிடித்து, சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையான் என்பதையும் கடைபிடிக்கிறார்கள். தூக்கு தண்டனை என்பது குற்றம் புரிந்தவர்களுக்கு. எப்பிடி ஒரு நாட்டையே குற்றம் சொல்லமுடியும். செந்தில் பாலாஜி தும்பி இன்னும் தலை மறைவாக இருக்கான், அதனால் திமுக குற்றம் செய்யும் கட்சி என்று சொல்ல முடியுமா.


ஆரூர் ரங்
நவ 21, 2024 15:42

ஒருவர் எடுத்துச் சென்ற திருக்குறள் புத்தகத்தின் மேல் அட்டையில் காவி உடையுடன் வள்ளுவர் படம் இருந்ததால் விமான நிலைய அதிகாரிகள் அதனைப் பிடுங்கி குப்பையில் வீசி விட்டனர். இன்றும் அங்கு மத வெறி அதிகம்தான் . நாளிதழ்களில் இஸ்லாத்துக்கு மாறிய மாற்று மத நபர்களை வாழ்த்தி பெட்டிச்செய்திகள் வருகின்றன.


Thiyagarajan S
நவ 28, 2024 07:30

எலே பொய் சொன்னாலும் பொருந்த சொல்லனும் 200 ரூபாய்க்கு இவ்வளவு கூவக்கூடாது.....


sankar
நவ 21, 2024 13:37

இங்கே வேங்கைவயலுக்கே இன்னும் விடை தெரியவில்லை


Ramesh Sargam
நவ 21, 2024 13:01

இந்தியாவிலும் குற்றங்கள் குறையவேண்டுமென்றால், சவுதி போல சட்டங்கள் கடுமையாக இருக்கவேண்டும். இல்லாததால்தான் இந்தியாவில் என்றைக்கும் இல்லாத அளவுக்கு அதிக குற்றங்கள் நடக்கின்றன. கொலை, பெண்கள் பாலியல் துன்புறுத்தல், சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல் இப்படி குற்றங்கள் பட்டியல் நீளும். பட்டியல் குறையவேன்றுமென்றால் நாமும் சவுதி சட்டங்களை இங்கே கொண்டுவரவேண்டும்.


Indian
நவ 21, 2024 18:41

இன்று தான் நேர்மையா கருத்து எழுதியிருக்கீர்கள்


Chess Player
நவ 21, 2024 12:05

சவுதியில் யாரும் வாழ முடியாது. உங்கள் வீட்டில் பிரார்த்தனை செய்ய முடியாது. அவர்கள் மற்ற மதங்களை வேறுபடுத்துவதில்லை. வழக்கமான முஸ்லீம் மனநிலை. என் வழியைப் பின்பற்றுங்கள் அல்லது வழி இல்லை. இன்றும், நீங்கள் இந்துவாக இருந்தால் குழந்தை பிறப்புச் சான்றிதழில், அவர்கள் "மதம் இல்லை" என்று நிரப்புவார்கள். அவர்கள் தவறு செய்தாலும், காவல்துறை உள்ளூர் மக்களை மட்டுமே ஆதரிக்கும். தங்கள் அரசுக்கு எதிராக யாராவது பேசினால் காட்டுமிராண்டித்தனமான தண்டனை. தேர்தல் இல்லை. ஒன்றுமில்லை. அவர்கள் சொல்வது போல் அவர்கள் இந்திய முஸ்லீம்களை மதிப்பதில்லை, நீங்கள் அனைவரும் அவர்களைப் போல் அசல் முஸ்லிம்கள் அல்ல


வைகுண்டேஸ்வரன்
நவ 21, 2024 11:59

நம்ம நாட்டில் குற்றம் செய்தவனே வந்து ஒத்துக் கொண்டாலும், போலீஸ் FIR தயாரிக்கணும். சாட்சி கண்டுபிடிக்கணும். Crime file ஒரு 100 - 200 பக்கம் வர்ற மாதிரி தயார் பண்ணனும். குற்றவாளியைக் காப்பாற்ற ஒரு வக்கீல் வருவான். ஜாமீன் கேப்பான். குடுத்துடுவாங்க. குற்றவாளி வீட்டுக்கு போயிடுவான். அடுத்த குற்றம் பிளான் பண்ணுவான். போலீஸ் அவனோட file லைத் தூக்கி பரணில் போட்டுருவாங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை